Saturday, 28 September 2013

சீனாவில் பயங்கரம் ராட்சத குளவிகள் கொட்டி 28 பேர் பரிதாப பலி

சீனாவில் பயங்கரம் ராட்சத குளவிகள் கொட்டி 28 பேர் பரிதாப பலி

Source: Tamil CNNசீனாவில் ராட்சத குளவிகள் கடந்த சில நாட்களாக கூட்டம் கூட்டமாக வந்து தாக்குதல் நடத்தியதில் 28 பேர் பலியாயினர்.சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள சாங்ஷி மாகாணத்தில் ஆங்காங், ஹான்சோங் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் கடந்த சில வாரங்களாக ஏராளமான விஷ குளவிகள் முற்றுகையிட்டிருப்பதாக பொதுமக்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த குளவிகள் பல்வேறு இடங்களிலும் கூட்டம் கூட்டமாக வந்து அவ்வழியாக செல்லும் மனிதர்கள் மற்றும் கால்நடைகளை தாக்க தொடங்கின. கடந்த சில நாட்களாகவே சாங்ஷி மாகாணத்தில் இந்த பிரச்சினை அதிகாரிகளுக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளன. விஷ குளவிகளை சமாளிக்க முடியாமல் அதிகாரிகளும், பொதுமக்களும் திணறி வருகின்றனர். கடந்த ஒருவாரத்தில் மட்டும் சுற்றியுள்ள 3 மாவட்டங்களில் இந்த விஷ
குளவிகள் தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு சிறப்பு மருத்துவ குழுவினர் விரைந்து சென்று நிலைமையை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த விஷ குளவிகள் தாக்குதலில் இதுவரை 28 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த குளவிகள் தாக்குவதால் உடலை பாதிக்கும் நச்சுத் தன்மை காரணமாக சிறுநீரகம் செயல் இழத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...