Saturday, 28 September 2013

வடமாகாணசபைத் தேர்தலையொட்டி வழங்கிய தேசிய அடையாள அட்டைகள் தனிச் சிங்களத்தில்

வடமாகாணசபைத் தேர்தலையொட்டி வழங்கிய தேசிய அடையாள அட்டைகள் தனிச் சிங்களத்தில்

Source: Tamil CNNவடமாகாணசபைத் தேர்தலையொட்டி தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொடுக்கும் முகமாக இடம் பெற்ற நடமாடும் சேவையில் விண்ணப்பித்தவர்களில் பலருக்கும் தனிச் சிங்களத்தில் மட்டும் விபரங்கள் பொறிக்கப்பட்ட நிலையில் தேசிய அடையாள அட்டைகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவ்வாறு தனிச்சிங்களத்தில் மட்டும் விபரங்களை உள்ளடக்கி அடையாள அட்டைகள் கிடைக்கப் பெற்றவர்கள் அதில் உள்ள விபரங்களை அறியமுடியாமல் இருப்பதுடன் அதில் உள்ள விபரங்கள் சரியா பிழையா என தெரியாத நிலையிலும் காணப்படுகின்றார்கள்.
இத்தகைய தேசிய அடையாள அட்டை கிடைக்கப் பெற்றவர்கள் தமது விபரங்கள் அடங்கிய கோரிக்கை கடிதத்தையும் முற்றும் தேசிய அடையாள அட்டைக்கான மூன்று படங்களையும் கிராம அலுவலாகள் ஊடாக மீள அனுப்பி குறிப்பிட்ட தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக தமிழ் சிங்கள மொழிகள் அடங்கிய விபரங்களுடன் தேசிய அடையாள அட்டையை மீளப் பெற முடியும் என தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் ஆட்பதிவுத் தினைக்களம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...