Wednesday 25 September 2013

நவநீதம்பிள்ளையின் அறிக்கையை ஆவலுடன் எதிர்பார்த்துள்ள சர்வதேச சமூகம்: அச்சத்தில் இலங்கை அரசு

நவநீதம்பிள்ளையின் அறிக்கையை ஆவலுடன் எதிர்பார்த்துள்ள சர்வதேச சமூகம்: அச்சத்தில் இலங்கை அரசு

Source: Tamil CNN
நவநீதம்பிள்ளை அம்மையாரின் எழுத்து மூல அறிக்கை கையளிக்கப்படவுள்ள நிலையில், கையகப் பிரதியொன்று ஐ.நா உள்ளக அரங்கில் வெளியாகியுள்ளது.பிரான்ஸில் இயங்கும் மனித உரிமைகள் அமைப்பின் இயக்குனர் ச.வி. கிருபாகரன் குறித்த கையகப் பிரதியில் குறிப்பிடப்பட்டுள்ளவை பற்றி கூறுகையில், இலங்கைக்கு சென்று தான் யார் யாரைச் சந்தித்துள்ளேன்.
அவர்கள் தன்னிடம் கூறிய விடயங்கள் என்ன? எதைப் பார்த்தேன் என்பதை மனித உரிமைகள் ஆணையாளர் நவி.பிள்ளை விபரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார் இன்றைய தினம் தனது வாய் மூல அறிக்கையினை சமர்ப்பிக்கவுள்ளார். இவ் அறிக்கையில் அண்மையில் இலங்கை சென்று வந்த விடயங்கள் இடம்பெற உள்ளமையால் சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள், இராஜதந்திரிகள் பலத்த ஆர்வத்துடன் உள்ளமை இங்கு அவதானிக்க கூடியதாக உள்ளது.
இலங்கை அரசாங்கம் பலத்த அச்சமடைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. மனித உரிமைகள் தொடர்பில் எது வித முன்னேற்றமும் இடம்பெறாமையே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.நேரங்கள் அண்மித்து வரும் நிலையில் ஜெனீவா நேரம் 4.30 மணியளவில் நவி.பிள்ளையின் அறிக்கை சமர்ப்பிக்க ஏற்பாடாகியுள்ளன. இவ் அறிக்கையினை அவதானிப்பதற்காக வெளிநாட்டுப் பிரதிநிதிகள், புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள், இலங்கை அரச பிரதி நிதிகள், குறிப்பாக சர்வதேச மன்னிப்புச்சபை பிரதிநிதிகள் கூட பிரசன்னமாகியுள்ளனர்.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...