Friday, 3 May 2013

இதயம் காக்கும் காய்கள்


இதயம் காக்கும் காய்கள்

வெள்ளை நிறம் கொண்ட காய்களைத் தொடர்ந்து சாப்பிட்டால் இதய நலத்துடன் இருப்பதாகவும், புற்றுநோயைத் தடுக்கும் எதிர்ப்புச்சக்தி உடலில் அதிகரிப்பதாகவும் ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
காளான் : இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.
வெங்காயம் : இதிலிருந்து கிடைக்கும் அலிசின் என்ற வேதிப்பொருள் கொழுப்பையும், இரத்த அழுத்தத்தையும் குறைக்கும் சக்தி கொண்டது.
காலிஃபிளவர் : இதிலுள்ள வெள்ளை அணுக்கள் புற்றுநோய் வருவதைத் தடுக்கின்றன. காலிஃப்ளவர் வைட்டமின் சத்து நிறைந்தது.
உருளைக்கிழங்கு, வாழைப்பழம் : இவையிரண்டும் ஒரே மாதிரியான ஊட்டச்சத்தினை கொண்டுள்ளன. இதில் அதிக அளவில் கார்போஹைடிரேட், பொட்டாசியம் போன்றவை உள்ளன.
வெள்ளைப்பூண்டு : இது நோய் எதிர்ப்புத் திறன் கொண்டது. இது ஆன்டிபாக்டீரியல், ஆன்டிபங்கல், மேலும், இரத்த நாளங்களில் படிந்துள்ள கொழுப்புகளை அகற்ற உதவுகிறது. இதயத்தை நலமாக வைத்திருப்பதில் வெள்ளைப் பூண்டு முக்கிய பங்காற்றுகிறது.
டர்னிப் : இதில் வைட்டமின் சி சத்து அதிகம் காணப்படுகிறது. இதைப் பச்சையாக சாலட் போல சாப்பிடலாம்.

ஆதாரம் தினமணி

No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...