Monday, 21 January 2013

சட்டம் ஓர் இருட்டறை


சட்டம் ஓர் இருட்டறை

சட்டம் ஓர் இருட்டறை, சட்டம் ஒரு பார்வையற்ற பிறவி என்றெல்லாம் நாம் சொல்வதுண்டு. இப்படியொரு ஒரு சொற்பதம் எப்படி உருவாயிற்று என்பதை நாம் நோக்கவேண்டும். சட்டத்திற்குக் கண் கிடையாது, அது சாட்சிகளை மட்டுமே நம்பி தீர்ப்பை வழங்கும்,  அது கண்ணைக் கட்டிக்கொண்டு தீர்ப்புச் சொல்லும் என்பது அதன் அர்த்தமல்ல. மாறாக அது பாரபட்சமின்றி தீர்ப்புச் சொல்லும் என்பதே உண்மையான பொருள். பல நாடுகளின் வழக்குமன்றங்களில் நீதிதேவதை ஒரு துணியால் தன் கண்களைக் கட்டிகொண்டு நிற்பதாக சிலை வைக்கப்பட்டிருப்பது இந்த அர்த்தத்திலேயே.  மேலும்,  பண்டைக் காலத்தில் எகிப்தில் வழக்கு விசாரணைகள் வெளிச்சமேயில்லாத இருட்டறைகளிலேயே இடம்பெற்றன. நீதிபதிகள் வழக்கு விசாரணைக்கு மட்டுமே செவிமடுத்து தீர்ப்பை வழங்கவேண்டும், அவர்கள் குற்றம் சுமத்துபவர் மற்றும் குற்றவாளிகளின் முகத்தைப் பார்த்து அதனால் தீர்ப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதற்கே இந்த இருட்டறை ஏற்பாடு.  இதையே சட்டம் ஓர் இருட்டறை எனக் கூறி வந்தனர்.

No comments:

Post a Comment