காடுகள்
மரங்கள், செடி கொடிகள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள், நீர்நிலைகள, மலைகள் என அனைத்தும் இணைந்த அற்புத கட்டமைப்பே 'காடு' என்றழைக்கப்படுகிறது. தமிழில் வனம், கானகம், அடவி, புறவு, பொதும்பு போன்ற பல சொற்களால் இது குறிக்கப்படுகிறது. தற்போதைய நிலையில் புவி மேற்பரப்பின் 9.4 விழுக்காடு அல்லது மொத்த நிலப்பரப்பின் ஏறத்தாழ 30 விழுக்காடு காடுகளினால் மூடப்பட்டுள்ளது. முன்னர் காடுகள் நிலப்பரப்பின் 50 விழுக்காடு வரை மூடியிருந்ததாக மதிப்பிட்டுள்ளனர். உலகளவில் ஒரு நாளைக்கு 350 ச.கி.மீ., பரப்பளவு காடுகள் ஏதோவொரு காரணத்திற்காக அழிக்கப்படுவதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. வேளாண்மை தொடங்கிய காலத்திற்குப் பிறகே 40 விழுக்காடு காடுகள் அழிக்கப்பட்டன. அதிலும் கடந்த 200 ஆண்டுகளில் 75 விழுக்காடு காடுகள் வேளாண்மைக்காக அழிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
பூமியில்
உள்ள உயிரினங்களில் மூன்றில் இரண்டு பங்கு காடுகளில் வாழ்கின்றன. காடுகள்
பூவுலகின் நுரையீரல்கள் என்றழைக்கப்படுகின்றன. காடுகள் வெள்ளப்பெருக்கைக்
கட்டுப்படுத்துவதுடன் மண் அரிப்பையும் தடுக்கின்றன. தென்னிந்தியாவில்
பாயும் அனைத்து நதிகளும் ஏதாவது ஒரு காட்டில்தான் உருவெடுக்கின்றன. நகரமும், நகர மக்களும் நலமாக வாழ, காடுகளே ஆதாரப் புள்ளியாக உள்ளன.
(ஆதாரம் : பூவுலகின் நண்பர்கள்)
No comments:
Post a Comment