Saturday, 22 February 2014

வி.உருத்திரகுமாரனின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கூடிய நிலையில் இந்தியா இல்லையாம் : இலங்கையில் சீனா ஆதிக்கமே உள்ளது

வி.உருத்திரகுமாரனின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கூடிய நிலையில் இந்தியா இல்லையாம் : இலங்கையில் சீனா  ஆதிக்கமே உள்ளது

Source: Tamil CNN
 unnamed (6)
சீனாவின் அதிகாரம் இலங்கையில் செலுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் வலியுறுத்தல்களை சிறிலங்கா அரசாங்கம் கவனத்தில் கொள்ளும் நிலையில் இல்லையென தெரிவித்துள்ள சிங்கள பௌத்த பேரினவாத அமைப்பான தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனுக்கு எதிராக கடும் சீற்றத்தினை வெளிப்படுத்தியுள்ளது.
தமிழின அழிப்புக்கு பன்னாட்டு விசாரணை மற்றும் பொதுசன வாக்கெடுப்பு தொடர்பில் இந்திய அரசினையும், இந்தியக்கட்சிகளையும் கோரும் தீர்மானமொன்றினை தனது அரசவையில் நிறைவேற்றியிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இது தொடர்பில் பத்திரிகையாளர் சந்திப்பொன்றினையும் சென்னையில் நடத்தியிருந்தது.
சிங்கள தேசம் வரலாற்றுரீதியாக இந்திய எதிர்பினை தன்னகத்தே கொண்டது என்பதும் சிங்கள தேசத்தின் தற்போதைய சீன உறவுக்கு பின்னால் இந்திய எதிர்ப்பு இருக்கின்றது என்பதும் இரகியமல்ல என வி.உருத்திரகுமாரன் அவர்கள் அப்பத்திரிகையாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையிலேயே சிங்கள பௌத்த பேரினவாத அமைப்பான தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்
இக்கருத்தினை வெளிப்படுத்தியுள்ளது.
புலம்பெயர்ந்த அமைப்புகள் எந்தவித கோரிக்கைகளை விடுத்தாலும், சிறிலங்காவுக்கு அழுத்தம்
கொடுக்கும் அளவுக்கு தற்போது இந்தியா இல்லை என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா மற்றும் சீனாவிற்கு இடையிலான உறவின் நெருக்கம் காரணமாக இந்த விடயம் உறுதியாகியுள்ளதாக தெரிவித்துள்ள இவ்வியக்கம், எதனையும் இலங்கையில் நிறைவேற்றக்கூடிய அதிகாரம் இந்தியாவிற்கு கிடையாதெனவும் இந்தியாவின் பலம் தற்போது இழக்கப்பட்டுள்ளதெனவும் தெரிவித்துள்ளது.
உலக ஒழுங்கலில் தென்னாசியப் பிராந்தியத்தினை பொறுத்தவரை, இந்தியாவின் முதன்மை பாத்திரம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதோடு சிறிலங்கா அரசு என்னதான் முயற்சிகளை எடுத்தாலும், இந்திய அரசின் முடிவுகளை மீறி இலங்கைத்தீவு இயங்க முடியாது என்ற அரசியல் யதார்த்தம் உள்ளதென பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment