சலூனில் முடிவெட்டச் சென்ற பான் கீ மூன்! – விடாமல் துரத்திய பத்திரிகையாளர்கள்
கியூபாவில் இன்று நடைபெறும் லத்தின் அமெரிக்க மற்றும் கரிபியன் நாடுகளுக்கிடையிலான இரண்டாவது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐ.நா.பொதுச் செயலாளர் பான் கி-மூன் கியூபா நேற்று தலைநகர் ஹவானா வந்தடைந்தார்.
முதல் முறையாக கியூபா வந்துள்ள அவருக்கு அந்நாட்டின் மந்திரிசபை துணை தலைவர் மரினோ முரில்லோ ஜார்ஜ் தலைமையில் முக்கிய பிரமுகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.கியூபாவின் சமூகம் சார்ந்த பொருளாதார வளர்ச்சி தொடர்பாக அரசு உயரதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்திய பான் கி-மூன், பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்கொடுமைகளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
பின்னர், தனது உதவியாளரை அழைத்த அவர் ‘முடி திருத்திக் கொள்ள வேண்டும் போல் தோன்றுகிறது’ என்று கூறினார். உள்ளூர் பிரமுகர்களிடம் விசாரித்த உதவியாளர், பழைய ஹவானா பகுதியில் உள்ள சிகை அலங்கார நிலையத்துக்கு பான் கி-மூனை அழைத்து சென்றார்.
காலியாக இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்த அவருக்கு ஒரு பெண் சிகை அலங்காரம் செய்வித்தார். இதற்குள், ஐ.நா.பொதுச் செயலாளர் பான் கி-மூன் முடி வெட்டிக் கொள்வதற்காக அந்த கடைக்கு வந்திருக்கும் செய்தி அப்பகுதி மக்களிடையிலும், பத்திரிகையாளர்கள் நடுவிலும் காட்டுத் தீ போல பரவியது.
கேமராக்களுடன் அங்கு வந்து குவிந்த அவர்கள், தூரத்தில் இருந்தவாறே பான் கி-மூன் முடி வெட்டிக் கொள்ளும் காட்சியை புகைப்படமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து சென்றனர். இதனால், அந்த சிகை அலங்கார நிலையம் அமைந்துள்ள பகுதியில் சிறிது நேரம் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
No comments:
Post a Comment