Saturday 30 November 2013

மியன்மரின் ஆங் சான் சூகிக்கு கௌரவ டாக்டர் பட்டம்: ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகம் வழங்கியது

மியன்மரின் ஆங் சான் சூகிக்கு கௌரவ டாக்டர் பட்டம்: ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகம் வழங்கியது

Source: Tamil CNN
மியான்மரின் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவரும், நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகிக்கு கான்பெர்ராவில் இயங்கி வரும் ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம் நேற்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
மியான்மர் நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய சேவையினைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டதாக ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனம் அறிவித்தது.68 வயதான சூகி, இந்த விருதுக்கான கடிதத்தினைப் பெறும்போது பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று பலத்த கரகோஷம் எழுப்பினர்.
பின்னர் விழாவில் ஆங் சான் சூகி பேசியதாவது:-
பெரும்பாலான மக்கள் தங்களது பயணத்தின் முடிவில் இருப்பதாகக் கருதுகின்றனர். ஆனால், நாம் ஆரம்பத்தில்தான் இருக்கின்றோம். இருப்பினும், நாம் தேர்ந்தெடுத்த பாதையில் நம்மால் செல்லமுடியும் என்பது குறித்து நமக்கு நம்பிக்கை உள்ளது.
கனவுகளை நனவாக்குவது கடினமான வேலையாகும். உலகம் நமது கனவுகளை நனவாக்க உதவும் என்று நம்புகின்றேன். முயற்சி இல்லாமல் நம்பிக்கை மட்டும் வைப்பது இயலாத காரியமாகும். அதனால் கடுமையான முயற்சியுடன் நம்முடைய லட்சியங்களை நிறைவேற்ற வேண்டும்.
ஜனநாயகத்திற்கான தேடுதலுக்கு முடிவில்லை. ஆஸ்திரேலியா மியான்மரின் ஜனநாயகப் பயணத்தினை ஆதரிக்கும் என்று நம்புகிறேன். கிழக்கும் மேற்கும் கலந்து உண்மையான ஒற்றுமைக்கும், பன்முகத் தன்மைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் ஆஸ்திரேலிய மக்கள், அவர்களின் தனித்தன்மையை என்றும் பாதுகாப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...