Wednesday, 18 September 2013

திட்டமிட்டு கொல்லப்பட்டாராம் இங்கிலாந்து இளவரசி டயானா

திட்டமிட்டு கொல்லப்பட்டாராம் இங்கிலாந்து இளவரசி டயானா

Source: Tamil CNN
இங்கிலாந்து இளவரசி டயானாவை அரச குடும்பத்தில் உள்ள முக்கியப்புள்ளிகள் தான் திட்டமிட்டு கொன்றதாக இங்கிலாந்து ராணுவ வீரர் தனது மனைவியிடம் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து ராஜ குடும்பத்தில் உள்ள சில முக்கியப்புள்ளிகள் தான் இளவரசி டயானாவை திட்டம் போட்டு கொன்றுவிட்டதாக இங்கிலாந்து விமானப்படை வீரர் ஒருவர் தனது மனைவியிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் இருவரும் தற்போது விவாகரத்து பெற்றுவிட்டனர். இது குறித்து அந்த பெண் கூறுகையில்,
என் முன்னாள் கணவர் கடந்த 2008ம் ஆண்டில் இளவரசர் வில்லியமுக்கு விமானப் படையில் சில பயிற்சி அளித்தார். அப்போது வில்லியம் கார்களில் சில பயிற்சி பெற்றார். என் முன்னாள் கணவரும் சில கார் ஸ்டண்ட்டுகள் செய்தார். ஜன்னல் வழியாக சுடுவது உள்ளிட்டவற்றை வில்லியமுக்கு கற்றுக் கொடுத்தார். அதைப் பார்த்த நான் இளவரசர் வில்லியமும், ஹாரியும் தாயில்லாமல் எப்படியோ வளர்ந்துவிட்டனர் என்றேன். அப்போது அவர் ராஜ குடும்பத்தில் இருந்து உத்தரவு வந்து தான் டயானா கொல்லப்பட்டதாக தெரிவித்தார்.
டயானா தோதி பயீதோடு இருப்பது பிடிக்காமல் ராஜ குடும்பத்து முக்கியப்புள்ளிகள் தான் அவரை தீர்த்துக் கட்ட திட்டமிட்டு உத்தரவிட்டார்களாம். டயானா வந்த காரை ஓட்டிய டிரைவரின் கண்ணில் விளக்கு அடிக்கப்பட்டது. எப்படி இப்படியும் செய்வார்கள் என்று நான் கேட்டதற்கு வேலை என்றால் வேலை தான் என்று தெரிவித்தார் அவர் என்றார். அந்த பெண்ணிடம் ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் விசாரித்துள்ளனர்.
இதையடுத்து 1997ம் ஆண்டு கார் விபத்தில் பலியான டயானாவின் வழக்கு குறித்து கடந்த மாதம் முதல் மீண்டும் விசாரணை துவங்கியுள்ளது. கடந்த 1997ம் ஆண்டு பாரீஸில் நடந்த கார் விபத்தில் டயானா, அவரது காதலர் தோதி பயீத் மற்றும் டிரைவர் ஹென்றி பால் ஆகியோர் பலியாகினர்.

No comments:

Post a Comment