Monday, 13 May 2013

உலகப் புகழ் பெற்ற வெந்நீர்க் கடற்கரை

உலகப் புகழ் பெற்ற வெந்நீர்க் கடற்கரை

வெந்நீர்க் கடற்கரை என்பது, நியுசிலாந்து நாட்டில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் கோரமண்டல் தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள கடற்கரையாகும். உயரமான மற்றும் தாழ்வான அலைகள் எழும்பும் இடங்களுக்கு இடையே இந்த வெந்நீர் ஊற்றுகள் தோன்றுகின்றன. தாழ்வான அலைகள் எழும்பும் இடங்களின் இருபக்கங்களிலும் மண்ணைத் தோண்டினால் வெந்நீர் வெளியே வந்து அந்த இடம் சிறிய வெந்நீர்க் குளமாக மாறி விடுகின்றது. இவ்விடத்திலிருந்து ஒரு நிமிடத்துக்கு 15 லிட்டர் வீதம் வெளிவரும் வெந்நீர், 64 செல்சியுஸ் டிகிரியைக் கொண்டிருக்கின்றது. இவ்வெந்நீர், உப்பு, கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம், ஃப்ளோரின், சோரியம்(bromine), சிலிக்கா ஆகிய கனிமங்களைப் பெருமளவில் கொண்டிருக்கின்றது. இந்த இயற்கையான வெந்நீர் ஊற்றுகள் இக்கடற்கரைக்கு எதிரேயுள்ள பாறைகளிலும் உள்ளன. பாறைகளில் பெரிய துளைகளையிட்டு அதிலிருந்துவரும் வெப்பமான தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் அமர்ந்து உடலுக்கு நலம் பெற்றுச் செல்கின்றனர். வழக்கமாக அங்குச் செல்கின்ற சுற்றுலாப் பயணிகள் தங்களோடு ஒரு வாளியையும் மண்வெட்டியையும் எடுத்துச் செல்கின்றனர். இவ்வெந்நீர்க் கடற்கரையுள்ள பசிபிக் பெருங்கடலின் தரைக்குக்கீழ் வெந்நீர் ஆறு ஒன்று பாய்வதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். Tairua மற்றும் Whitiangaவுக்கு இடையே அமைந்துள்ள இக்கடற்கரை நீளமான அழகான வெண்மைநிறக் கடற்கரையாகும்.
இப்பகுதிக்கு ஆண்டுதோறும் ஏறக்குறைய ஏழு இலட்சம் சுற்றுலாப் பயணிகள் செல்கின்றனர்.
ஆதாரம் விக்கிப்பீடியா

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...