Thursday, 21 March 2013

ரக்கூன்கள் Raccoons

ரக்கூன்கள்  Raccoons

ரக்கூன் என்பது வட அமெரிக்காவில் அதிகமாகக் காணப்படும் பாலூட்டி விலங்கினமாகும். இந்த ரக்கூன் விலங்குகள் எந்தப் பொருள் கிடைத்தாலும், தண்ணீரில் நன்றாக கழுவிய பின்னரே உண்ணும். சாம்பல் நிறத்தில் அடர்த்தியான முடிகளைக் கொண்டுள்ள ரக்கூன்கள் மிகவும் அறிவுள்ள விலங்கினமாகக் கருதப்படுகின்றன. இவை, மூன்று ஆண்டுகளுக்கு அனைத்தையும் நினைவில் வைத்துக்கொள்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவற்றின் உடல் அமைப்புகள், 40 முதல் 70 செ.மீ. நீளத்தையும், ஏறக்குறைய 22.8 செ.மீ. முதல் 30.4 செ.மீ வரையிலான உயரத்தையும், 3.8 கிலோ கிராம் முதல் 9 கிலோ கிராம் வரையிலான எடையையும் கொண்டுள்ளன. இவை 20 ஆண்டுகள்வரை உயிர் வாழ்கின்றன எனச் சொல்லப்பட்டாலும், இவற்றின் சராசரி ஆயுள்காலம் 1.8 முதல் 3.1 ஆண்டுகளாகும். அமெரிக்கப் புதிய கண்டத்தில் வாழும் procyonid விலங்கின வகைகளில், ரக்கூன்கள் உருவத்தில் பெரியவையாகும். இவை ஐரோப்பாவிலும் ஜப்பானிலும் சில இடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கானடாவில் டொரொன்ட்டோ போன்ற மாநகரங்களிலும் இவை வாழ்கின்றன. பொதுவாக, கால வெப்பநிலை 28 செல்சியுஸ்க்கு அதிகம் இருந்தால் இரவில் இவை வெளியே வரும். இதற்குக் குறைவாக இருந்தால் கூடுகளிலே தங்கியிருக்கும். குளிரில் இவை உணர்ச்சியற்று, மரமரப்புற்ற நிலையில் இருக்கும். ரக்கூன்கள் குளிர்காலம் முழுவதும் ஏறக்குறைய தூங்கிக் கொண்டிருக்கும் எனச் சொல்லப்படுகின்றது. ரக்கூன்கள் பெரும் நகரங்களில் இரவில் இரை தேடி அலையும்போது அவற்றைக் காணமுடியும்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...