Tuesday, 22 January 2013

தண்ணீரில் ஓடும் இரு சக்கரவண்டி..! பெட்ரோலுக்கு, "டாட்டா'..!

தண்ணீரில் ஓடும் இரு சக்கரவண்டி..!
பெட்ரோலுக்கு, "டாட்டா'..!சாதனைத் தமிழனைப் பாராட்டுவோம்..!



காரைக்கால்: பெட்ரோலுக்கு, "டாட்டா' காட்டும் வகையில், தண்ணீரில் பைக் இயக்கிய, காரைக்காலை சே ர்ந்தவரை, முதல்வர் ரங்கசாமி பாராட்டினார். காரைக்கால் வள்ளல் சீதக்காதி வீதியைச் சேர்ந்தவர், அமீது மரைக்காயர் 42, ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். எஸ்.எஸ்.எல்.சி., வரை படித்த இவர், பிரான்சில் டெக்னிக்கல் கோர்ஸ் படித்துள்ளார். பெட்ரோல் விலை அதிகரிப்பதால், தண்ணீரில் வாகனம் ஓடும் தொழில் நுட்பத்தை கண்டுபிடிக்க முடிவு செய்தார். ஐந்து ஆண்டுகளாக, பல நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆய்வுப் பணியைத் தொடர்ந்தார்.

"எலக்ட்ரோலைசிஸ்': இதில், "எலக்ட்ரோலைசிஸ்' தொழில் நுட்பத்தின் அடிப்படையில், "கரன்ட்' மூலம் தண்ணீரில் உள்ள ஹைட்ரஜனைத் பிரித்து, பெட்ரோல், டீசல், எரிவாயுவில் ஓடும் மோட்டார் வாகனங்களை தண்ணீரில் இயக்க முடியும் என கண்டுபிடித்தார். அமீது மரைக்காயர், நேற்று முன்தினம் மாலை, சட்டசபையில் முதல்வரைச் சந்தித்து, தன் தயாரிப்பு குறித்து, செயல் விளக்கம் அளித்தார். முதல்வர் ரங்கசாமி ஆவலுடன் கேட்டு மரைக்காயரைப் பாராட்டினார். முதல்வரின் பாராளுமன்ற செயலர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., உடனிருந்தார்.

அமீது மரைக்காயர் கூறியதாவது:"எலக்ட்ரோலைசிஸ்' தொழில்நுட்பத்தின் அடிப்படையில், தண்ணீரில் வாகனங்களை இயக்குவது குறித்து, ஐந்து ஆண்டுகளாக ஆய்வு செய்தேன். இதில் இரு வகை உள்ளது. பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட எரிபொருளுடன் தண்ணீர் கலந்து இயக்குவது ஒரு வகை. பெட்ரோல் டீசல் எதுவுமின்றி, முழுவதும் தண்ணீரில் இயக்குவது, மற்றொரு வகை.எரிபொருளுடன் தண்ணீரால் இயக்க, பைக்கிற்கு, 5,000 முதல், 10 ஆயிரம் ரூபாய்வரை தனியாக செலவாகும். முழுவதும் தண்ணீரால் இயங்க, 25 ஆயிரம் முதல், 30 ஆயிரம் ரூபாய்தனியாக செலவாகும்.எந்த வாகனத்திலும், என் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தலாம். ஓட்டும் போது, எந்த பிரச்னையும் இருக்காது. பெட்ரோல், டீசல், எரிவாயு உதவியோடு வாகனம் ஓட்டும் போது, சில, கி.மீ.,க்கு பின் மீண்டும் பெட்ரோல், டீசல் நிரப்ப வேண்டும். ஆனால் தண்ணீரில் இந்தப் பிரச்னை இருக்காது. குறைந்தது, ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் வரை ஓட்டலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...