Tuesday, 6 October 2020

மியான்மார் ஏழைகளிடையே இயேசு சபையினரின் பணி

மியன்மார் நாட்டிற்குள்ளேயே புலம்பெயர்ந்த குடும்பம்
மியான்மார் நாட்டில் வாழும் ஏழைகளை முன்னேற்ற, நிகழ்கால மீட்பு திட்டங்களுடன், வருங்காலத்திற்குரிய திட்டங்களையும் தீட்டி செயல்படுத்திவரும் இயேசு சபையினர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 கொள்ளைநோய் காலத்தில், மியான்மார் நாட்டில், அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள வறியோரிடையே, அந்நாட்டு இயேசு சபை அருள்பணியாளர்கள், தங்கள் உதவிப்பணிகளை அதிகப்படுத்தியுள்ளனர்.

கொரோனா நோய்க்கிருமிகள் பரவத்துவங்கிய காலத்திலேயே, அதாவது மார்ச்  மாதமே, தனிக்குழு ஒன்றை அமைத்து, இந்நோயால் பாதிக்கப்பட்ட ஏழைமக்கள் குறித்து விவரங்களைத் திரட்டிவந்த இயேசு சபையினர், அரசு அதிகாரிகள், துறவு மடங்கள், சமுதாய அமைப்புக்கள் ஆகியவைகளோடு இணைந்து, பாதிக்கப்பட்ட மக்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு உதவிவருகின்றனர்.

தலைநகர் யாங்கூனைச் சுற்றியுள்ள ஏழைகள் வாழும் 4 பகுதிகளில், ஏழைகளுக்கு உணவு விநியோகிக்கும் 10 மையங்களை துவக்கிய இயேசு சபையினர், ஒவ்வொன்றின் வழியாகவும் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உதவி வருகின்றனர்.

உணவு உதவிகளை வழங்குவதுடன், அவர்கள் தங்கள் வருங்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கு உதவும் நோக்கத்தில், மூன்று சக்கர மிதிவண்டிகள், தையல் இயந்திரங்கள், சமையல் பாத்திரங்கள் போன்றவற்றை வாங்குவதற்கு சிறு நிதியுதவிகளையும் கொடுத்து உதவி வருகிறது இயேசு சபை.

No comments:

Post a Comment