கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்
சுவாமி விவேகானந்தர் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார். அவ்வேளையில், ஒருவர், குறுக்கிட்டு, "ஆண்டவனை அடைய நாம் ஏன் ஆலயம் செல்ல வேண்டும்? ஆலயமின்றி ஆண்டவனை அடைய முடியாதா?”, என்று கேட்டார். அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும் முன், அவரிடம், “கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?”, என வினவினார், விவேகானந்தர். கேள்வி கேட்டவர் ஓடிப்போய், ஒரு குவளை நிறைய, தண்ணீர் கொண்டுவந்தார்.
சுவாமி கேட்டார், “நான் தண்ணீர்தானே கேட்டேன், எதற்கு இந்த குவளை?, குவளை இல்லாமல் தண்ணீர் கொண்டு வரமுடியாதா?” என்று.
குழம்பிப் போனார் கேள்வி கேட்டவர். “அது எப்படி முடியும்?” என்று கேட்டார்.
இப்போது பதில் சொன்ன சுவாமி விவேகானந்தர் அவர்கள், “ஆம் சகோதரனே, தண்ணீரைக் கொண்டுவர குவளை தேவைப்படுவதுபோல, ஆண்டவனை உணர்ந்து மகிழ, ஓர் இடம் வேண்டாமா? அதுதான் ஆலயம்..!” என விளக்கினார்.
No comments:
Post a Comment