Monday, 9 February 2015

CCBI ஆயர்கள் பேரவையின் புதிய தலைவர்கள்

CCBI ஆயர்கள் பேரவையின் புதிய தலைவர்கள்
CCBI என்ற இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர்கள் பேரவையின் தலைவராக, மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பங்களூருவில் நடைபெற்றுவரும் CCBI ஆயர்கள் பேரவையின் 27 வது ஆண்டுக் கூட்டத்தில், அப்பேரவையின் உதவித் தலைவராக கோவா பேராயர் பிலிப் நேரி ஃபெராரோ, பொதுச் செயலராக கோழிக்கோடு ஆயர் வர்க்கீஸ் சக்களக்கள் ஆகியோர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இத்தலைவர்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள்.
கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்கள், ஆசிய ஆயர்கள் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் திருப்பீட நிர்வாகச் சீரமைப்பில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு ஆலோசனை கூறும் எட்டு கர்தினால்களில் ஒருவர்.
CCBI என்ற இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர்கள் பேரவை, ஆசியாவிலுள்ள ஆயர்கள் பேரவையில் பெரியதும், உலகிலுள்ள ஆயர்கள் பேரவையில் நான்காவதுமாக உள்ளது.   
இம்மாதம் 3ம் தேதி தொடங்கிய இக்கூட்டம் 9ம் தேதி நிறைவடையும். இதில் இந்தியாவின் 131 இலத்தீன் மறைமாவட்டங்களின் 140 ஆயர்கள் கலந்து கொள்கின்றனர்.

No comments:

Post a Comment

Pope: ‘Synod final document forms part of papal Magisterium’

  Pope: ‘Synod final document forms part of papal Magisterium’ Pope Francis publishes a note accompanying the Final Document of the Synod of...