தனியார் மயமாகிறது Royal Mail
பிரிட்டன் தபால் துறை தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது.ஐரோப்பிய நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன.நிதி பற்றாக்குறை காரணமாக தன்னுடைய முன்னாள் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் அளிப்பதில் பிரிட்டன் தபால் துறைக்கு சிரமம் ஏற்பட்டது.
இதனை சரிசெய்ய தபால் பட்டுவாடா கட்டணங்களையும், தபால் தலை கட்டணங்களையும் உயர்த்தியது.
இருப்பினும் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய முடியாத காரணத்தால், ராயல் மெயில் என்பதை தனியார் மயமாக்க முடிவு செய்யப்பட்டு, கடந்த ஜீலை மாதம் அறிவிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து 50 சதவிகிதத்துக்கும் அதிகமான பங்குகளை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.பிரிட்டன் தபால் துறையில் பணிபுரியும் ஊழியர்கள், பங்குகளை வாங்க சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment