Monday, 9 September 2013

புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள்

புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள்

ஏறத்தாழ 454 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பெருவெடிப்பின் காரணமாக தோன்றிய பூமி, சூரியக் குடும்பத்தில் சூரியனிலிருந்து மூன்றாவதாக அமைந்திருக்கும் கோள் ஆகும்.
இந்த பூமியில், ஏறத்தாழ 350 கோடி ஆண்டுகளுக்கும் மேலாக உயிரினங்கள் வாழ்ந்துவருகின்றன என்றும், புவியில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் மேலும் சுமார் 150 கோடி ஆண்டுகள் வரை நீடிக்கும் என்றும் அறிவியல் அறிஞர்களால் கூறப்படுகிறது.
தனது அச்சிலிருந்து 23.4° டிகிரி சாய்ந்து வினாடிக்கு 30  கி.மீ வேகத்தில் சுழலும் புவி தன்னைத்தானே ஒரு முறை சுற்றிக்கொள்ள 24 மணிநேரமும் (ஒரு நாள்) சூரியனை ஒரு முறை சுற்றிவர 365.24 நாட்களும் (1 ஆண்டு) எடுத்துக்கொள்கிறது. புவி தொடர்ந்து பல மில்லியன் ஆண்டுகளாக ஒரே அச்சில் (23.4°) சுழன்று வருவதற்கு காரணம் நிலவிலிருந்து புவியை நோக்கி வரும் ஈர்ப்பு விசைதான்.
தற்போதுவரை புவியை மனிதரால் 8 கி.மீ ஆழத்திற்கு மேல் தோண்ட இயலவில்லை. காரணம் பூமிக்கு அடியில் போகப்போக வெப்பநிலை அதிகரித்துக்கொண்டே போவதால்தான். ஏறத்தாழ 50 கி.மீ ஆழத்திற்கு கீழே புவி திடநிலையில் இருக்காது, திரவ நிலையில் (Liquid) தான் இருக்கும். சில இடங்களில் புவிக்குள் அழுத்தம் அதிகரித்து அந்தக் குழம்புகள் புவியைத் துளைத்துக்கொண்டு வெளியே வருவதைத்தான் நாம் எரிமலை (Volcano) என்று அழைக்கிறோம்.

ஆதாரம் : சித்தார்கோட்டை
 

No comments:

Post a Comment