பதநீர்
பனை மரத்தில் நுங்கு பிஞ்சு உருவானதும், அதைக் கட்டி, வளர்ச்சியை முதலில் கட்டுப்படுத்துவார்கள். பிஞ்சு ஓரத்தில் லேசாக கீறிவிட்டு, தினமும் மூன்று முறை மரம் ஏறி, அந்த பிஞ்சை அழுத்த, சொட்டுச்
சொட்டாக மண்பானையில் பால்(கள்) இறங்கும். இப்படி ஒரு மரத்தில் மூன்று
மாதம் வரை பால் எடுக்கலாம். அந்தப் பாலில் சுண்ணாம்பு சேர்த்தால் பதநீர்
ஆகும். சில இடங்களில் மண்பானை அடியில் சுண்ணாம்பை தடவி கட்டிவிடுவார்கள்.
இதனால் மரத்திலிருந்து பானையை இறக்கும்போதே பதநீர் தயார். பனைமர பதநீரைவிட, தென்னைமர பதநீர் போதை அதிகம் தரும். ஆனால் சுவையில் பனைமர பதநீரை மிஞ்சமுடியாது.
பனை
மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களைத் தீர்க்கும்
மருந்தாக உள்ளது. பனை நீரிலுள்ள சீனி சத்து உடலுக்குத் தேவையான வெப்பத்தைத்
தருகிறது. இதிலிருக்கும் குளுக்கோஸ், மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலைச் சீராக்கி நல்ல பலத்தைத் தருகிறது.
கருவுற்றப் பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப்புண்
முதலியவற்றை பதநீர் குணப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.
இதை அருந்துவதால் இருதய நோய் குணமாகும். இதிலிருக்கும் சுண்ணாம்புச்சத்து
பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்படுவதைத் தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது. மேலும், பதநீரானது நுரையீரல் நோய்,, இரத்தக்கடுப்பு, அதிக வெப்பம், பசியின்மை, வயிற்றுப்புண், வாய்வு தொடர்பான நோய்களையும் குணப்படுத்துகிறது.
No comments:
Post a Comment