பற்பசையில் எது சிறந்தது?
'பற்களை வலுப்படுத்தும், காரையைத் தவிர்க்கும், பற்களை வெண்மையாக வைத்திருக்கும், பற்கூச்சத்தைப் போக்கும் பற்பசை என பல்வேறு வகையான பற்பசைகள் உள்ளன.
ஃப்ளோரைட்(Fluoride) பற்பசை : ஃப்ளோரைட் உள்ள பற்பசை, பற்களின் எனாமலைப் பாதிக்கக்கூடிய அமிலத்திற்கு எதிராகச் செயல்பட்டு, எனாமலைப் பாதுகாத்து பல்லை வலுப்படுத்துகின்றது; பற்கள் சொத்தையாகாமல் தடுக்கிறது.
காரை படியாமல் தடுக்கும் பற்பசை : இதில் இருக்கும் ஃப்ளோரைட், பைரோபாஸ்பேட்ஸ்(Pyrophosphates) , டெட்ராசோடியம் பைரோபாஸ்பேட் (Tetrasodium pyrophosphate) மற்றும் ஸிங்க் சிட்ரேட்(Zinc citrate) போன்ற மூலப்பொருட்கள் காரை படியாமல் காப்பதுடன், பற்களில் படிந்த காரையையும் நீக்குகின்றன.
வெண்மைப்படுத்தும் பற்பசை: முத்து போன்ற வெண்மையான பற்களைத் தரும். இவற்றில் உள்ள சிராய்க்கும் தன்மைகொண்ட கால்ஷியம் பாஸ்பேட், அலுமினா போன்ற மூலப்பொருட்கள் உணவு, பானம்
மற்றும் புகைப்பழக்கத்தால் ஏற்படும் கறைகளை நீக்கி பற்களைப்
பளபளப்பாக்குகின்றன. பற்கூச்சத்தைத் தவிர்க்கும் பற்பசை : ஸ்ட்ரான்ஷியம்
குளோரைட் என்னும் மூலப்பொருள் பல்லின் மிக நுண்ணிய குழாய்களை (Microtubules)அடைத்து, வெப்பம் மற்றும் குளிர்ச்சி உணர்வுகளை பற்களில் உள்ள நரம்புகளைச் சென்றடையாமல் தடுக்கிறது.
ஈறுகளைப் பாதுகாக்கும் பற்பசை : இதில் இருக்கும் ஸ்டேனஸ் ப்ளோரைட் (Stannous fluoride) பற்களின் ஈறுகளில் வீக்கம் வராமல் தடுக்கிறது.
டிரெய்னிங் ஜெல் பற்பசை : பல் தேய்க்கக் கற்றுக்கொள்ளும் குழந்தைகளுக்கான பற்பசை. குழந்தைகளைக் கவரும் நிறங்களில், ப்ளேவர்களில், குறைந்த அளவு ஃப்ளோரைட் உள்ள ட்ரெய்னிங் ஜெல் பற்பசை கிடைக்கிறது.
மூலிகை பற்பசை: வேதியப்பொருள் சேர்க்காத, முற்றிலும் இயற்கையான மூலிகைகளால் தயாரிக்கப்படுகிறது.
'ஃப்ளோரைட் பற்பசைதான் எல்லாப் பற்களுக்கும் ஏற்றது. அடிக்கடி பற்பசையை மாற்றுவதும் தவறு. பற்களின் பாதிப்புக்கு ஏற்ப, மருத்துவரின் ஆலோசனைப்படி பற்பசையைப் பயன்படுத்தலாம். என்ன பற்பசை, எவ்வளவு பயன்படுத்துகிறோம் என்பதைவிட, பற்பசையைக் கொண்டு எப்படி பல்துலக்குகிறோம் என்பதில்தான் பல்லின் நலம் அடங்கியிருக்கிறது.
ஆதாரம் : டாக்டர் விகடன்
No comments:
Post a Comment