Monday, 16 September 2013

சூரிய மண்டலத்துக்கு அப்பால் உள்ள ஒலியை பதிவு செய்து அனுப்பியது வொயேஜர் விண்கலம்

சூரிய மண்டலத்துக்கு அப்பால் உள்ள ஒலியை பதிவு செய்து அனுப்பியது வொயேஜர் விண்கலம்

Source: Tamil CNN
சூரிய மண்டலத்தை கடந்து சென்றுள்ள முதல் விண்கலமான அமெரிக்காவின் வாயேஜர் 1 முதன்முறையாக சில விநாடிகள் நீடிக்கும் ஒலியை பதிவு செய்து பூமிக்கு அனுப்பியுள்ளது. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் சூரிய மண்டலத்தை ஆய்வு செய்வதற்காக, கடந்த 1977ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் திகதி வாயேஜர் 1 என்ற விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பியது. அதற்கு துணை விண்கலமாக 16 நாட்களுக்குப் பிறகு வாயேஜர் 2 விண்கலத்தையும் அனுப்பியது.
36 ஆண்டுகள் பயணம் செய்த வாயேஜர் 1 விண்கலம் கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி சூரிய மண்டலத்தை கடந்து இன்டர்ஸ்டேல்லர் மண்டலத்தை அடைந்தது. சூரியனில் இருந்து ஏறக்குறைய 1900 கோடி கி.மீ. தூரத்தில் இருக்கிறது. மனிதனால் உருவாக்கப்பட்ட விண்கலங்களால் சூரிய மண்டலத்தை தாண்டி பயணம் செய்ய முடியுமா என்ற கேள்வி நீண்ட காலமாக அறிவியல் உலகத்தில் இருந்து வந்தது. ஆனால், புளுடோனியத்தால் தயாரிக்கப்பட்ட வாயேஜர் 1 விண்கலம் முதல் முதலாக சூரியமண்டலத்தை தாண்டி சென்றுள்ளது. இது அறிவியல் உலகில் மிகப்பெரிய நினைத்து பார்க்க முடியாத சாதனையாக கருதப்படுகிறது.
வாயேஜர் விண்கலம் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நட்சத்திரங்களுக்கு இடையே உள்ள பிளாஸ்மா பகுதியில் பயணம் செய்து, இன்டர்ஸ்டெல்லர் மண்டலத்தை அடைந்துள்ளது. அங்கிருந்து வாயேஜர் 1 அனுப்பும் சிக்னல்கள் பூமியை வந்தடைய 17 மணி நேரம் ஆகிறது. இத்தனைக்கும் சிக்னல்கள் ஒலியின் வேகத்தில் பயணம் செய்கின்றன. ரேடியோ சிக்னல்களையும் ஒலி சிக்னல்களையும் அங்கிருந்து தொடர்ந்து அனுப்பி வருகிறது.

No comments:

Post a Comment