Sunday, 15 September 2013

உறுமி

உறுமி

உறுமி என்பது இடைப்பகுதி சுருங்கிய இருபக்கங்களை உடைய இசை தோல்கருவி ஆகும். இதன் இரு முனைகளும் அகன்றிருக்கும். பம்பை என்னும் கருவியைவிட சிறிது நீளமானது.
இக்கருவியின் பக்கங்களில் அடித்து ஒலியை உண்டாக்குவது கிடையாது. மாறாக, ஒன்றரை அடி நீளமுள்ள வளைந்த குச்சியை இடது கையில் பிடித்து கருவியின் இடது பக்க தோலில் மேலும், கீழும் தேய்த்து ஒலியை ஏற்படுத்துகின்றனர்.
இது விலங்கு உறுமுவதைப் போன்ற ஒலியை உண்டாக்குகிறது. உறுமியுடன் நாதஸ்வரமும், சிறுபம்பையும் சேர்த்து வாசிக்கப்படும் பொழுது உறுமி மேளம் என்னும் பெயர் பெறுகிறது.
உறுமி மேளம் சவ ஊர்வலத்தில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. மங்கள சடங்குகளில் இது இடம்பெறுவது இல்லை. சில சமயங்களில் இக்கருவியை வாசித்துக்கொண்டே கால்களில் சலங்கை கட்டிக்கொண்டு ஆடுகின்றனர். தலையாட்ட பழக்கப்படுத்தப்பட்ட பெருமாள் மாட்டுடன் செல்லும் இரந்துண்போர்களும் இக்கருவியை இசைப்பர்

ஆதாரம் : ‘ஆழ்கடல் களஞ்சியம்இணையதளம்
 

1 comment:

  1. உறுமி ஸ்ரீ முத்தாலம்மனுக்கு உகந்த வாத்தியம்.சில இன மக்கள் மங்கள நிகழ்ச்சிக்கும் இறப்புக்கும் பயன் படுத்துகிறார்கள்

    ReplyDelete