Wednesday, 18 September 2013

தமிழை வழக்குமொழியாக அறிவிக்கக் கோரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் மேலும் 5 பேர் குதிப்பு

தமிழை வழக்குமொழியாக அறிவிக்கக் கோரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் மேலும் 5 பேர் குதிப்பு

Source: Tamil CNNதமிழை வழக்கு மொழியாக அறிவிக்க வேண்டும் என்று வக்கீல்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.இந்த கோரிக்கையை நிறைவேற்ற கோரி சென்னை ஐகோர்ட் வளாகத்தில் வக்கீல்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கி உள்ளனர். வக்கீல்கள் கயல்விழி, வேல்முருகன், பகத்சிங் ஆகியோர் நேற்று முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.அவர்களை ஐகோர்ட் தலைமை பதிவாளர் பொன்.கலையரசன், நிர்வாக பதிவாளர் விஜயன் ஆகியோர் சந்தித்து பேசினார்கள். போலீசாரும் சந்தித்தனர்.அப்போது, உண்ணா விரதத்தை வக்கீல்கள் கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவர்கள் அதை ஏற்கவில்லை.
ஐகோர்ட் வளாகத்தில் இருந்து வெளியேறவும் மறுத்துவிட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு ஐகோர்ட் தலைமை பதிவாளர் பொன். கலையரசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:சென்னை ஐகோர்ட் வளாகத்தில் அனைத்து கதவுகளும் காலை 9 மணிக்கு திறக்கப்படும். மாலை 6 மணிக்கு மூடப்பட்டு விடும். எனவே, மாலை 6 மணிக்கு மேல் வக்கீல்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் ஐகோர்ட் வளாகத்துக்குள் வர அனுமதி இல்லை. மறு உத்தரவு வரும் வரை இது அமல்படுத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த நிலையில் ஏற்கனவே ஐகோர்ட் வளாகத்தில் உண்ணாவிரதம் இருக்கும் 3 வக்கீல்களுடன் மேலும் 5 வக்கீல்கள் இன்று காலவரையற்ற உண்ணாவிரத்தை தொடங்கி உள்ளனர்.

No comments:

Post a Comment