Saturday, 13 June 2015

Bishop Thomas Macwan of Ahmedabad diocese is appointed as the new Metropolitan Archbishop of Gandhinagar, Gujarat.

Bishop Thomas Macwan of Ahmedabad diocese is appointed as the new Metropolitan Archbishop of Gandhinagar, Gujarat. 
 


காந்திநகர் உயர் மறைமாவட்டத்திற்குப் புதிய பேராயர்
இந்தியாவின் காந்திநகர் உயர் மறைமாவட்டத்தின் புதிய பேராயராக, அகமதபாத் மறைமாவட்டத்தின் தற்போதைய ஆயர் Thomas Ignatius Macwan அவர்களை இவ்வெள்ளியன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

குஜராத் மாநிலத்தின் காந்திநகர் உயர் மறைமாவட்டத்தின் மேய்ப்பராகப் பணியாற்றிய 76 வயதாகும் பேராயர் Stanislaus Fernandes அவர்களின் பணி ஓய்வை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவ்வுயர் மறைமாவட்டத்திற்குப் புதிய பேராயரை நியமித்துள்ளார்.



 காந்திநகர் உயர் மறைமாவட்டத்தின் புதிய பேராயராக நியமிக்கப்பட்டுள்ள ஆயர் Thomas Ignatius Macwan அவர்கள், 1952ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி Nadiadவில் பிறந்தார். இவர், 1988ம் ஆண்டில் குருவாகவும், 2003ம் ஆண்டு சனவரி 11ம் தேதி Ahmedabad ஆயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார்.
காந்திநகர் உயர் மறைமாவட்டத்தில் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட கத்தோலிக்கர் உள்ளனர்.


ஆதாரம் : வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...