2012 முதல் கத்தாரில் 500 இந்தியத் தொழிலாளர்கள் பலி
கத்தாரில் 2012-ம் ஆண்டின் ஆரம்பம் முதல் 500க்கும் மேற்பட்ட இந்தியத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக பிரிட்டனிலிருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
கத்தாரிலுள்ள இந்தியத் தூதரகம் இந்த எண்ணிக்கையை உறுதிப்படுத்தியுள் போதிலும், குறித்த மரணங்களுக்கான சூழ்நிலைகள் குறித்த விபரங்களை அளிக்கவில்லை என்று கார்டியன் நாளிதழ் கூறியுள்ளது.இயற்கை மரணங்கள், வீதி விபத்துக்கள் மற்றும் தொழிற்தள விபத்துக்கள் போன்ற காரணங்களால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்று கத்தாரின் தொழிலாளர் அமைச்சு கூறியுள்ளது.
2022-ம் ஆண்டு கால்பந்து உலகக் கிண்ணப் போட்டிகள் கத்தாரில் நடக்கவுள்ள நிலையில், அங்கு நடந்துவரும் கட்டுமான வேலைகளிலேயே பெரும்பாலான உயிரிழப்புகள் நேர்ந்துள்ளதாக நம்பப்படுகிறது. கத்தாரில் கடந்த ஆண்டில் தொழில் சம்பந்தப்பட்ட விபத்துக்களில் சிக்கி 185 பேர் வரையான நேபாள கட்டடத் தொழிலாளர்கள் பலியாகியுள்ளதாக இந்த மாதத்தின் ஆரம்பத்தில் செய்திகள் வெளியாகின.
ஒருவாரத்துக்கு முன்னர், 2022- கத்தார் உலகக்கிண்ணப் போட்டிகளின் ஏற்பாட்டாளர்கள் தொழிலாளர்களின் உரிமைகள் பற்றிய விபரங்களை வெளியிட்டனர். கத்தார், அதன் தொழில் நடைமுறைகளை மாற்றியமைக்க வேண்டுமென்று கால்பந்து விளையாட்டை நிர்வகிக்கும் உலகளாவிய நிறுவனமான ஃபிஃபா கேட்டுக் கொண்டதற்கு இணங்கவே இந்த தொழிலாளர் உரிமைகள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment