Wednesday, 25 September 2013

அமெரிக்க வாடகைத் தாய்மார் மூலம் குழந்தை பெற முண்டியடிக்கும் சீனர்கள்

அமெரிக்க வாடகைத் தாய்மார் மூலம் குழந்தை பெற முண்டியடிக்கும் சீனர்கள்

Source: Tamil CNN
சீனாவில் ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டம் கடுமையாக அமல்படுத்தப்படுகிறது. எனவே, அவர்களால், சட்டப்பூர்வமாக ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ள முடியவில்லை. மேலும், மனைவியை தவிர வேறொரு பெண் மூலம் வாடகை தாய் முறையில் குழந்தை பெறவும் அனுமதி கிடையாது.எனவே, சீனாவில் உள்ள பெரும் பணக்காரர்கள் மற்றும் குழந்தையில்லா தம்பதிகள் வெளிநாடுகளை சேர்ந்த வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று வருகின்றனர்.குறிப்பாக அமெரிக்காவை சேர்ந்த வாடகை தாய்மார்கள் மூலம் குழந்தை பெறவே விரும்புகின்றனர்.
ஏனெனில் தங்கள் குழந்தைக்கு அமெரிக்க குடிமகன் என்ற உரிமை கிடைக்கும்.அதன் மூலம் அக்குழந்தை தனது 21வது வயதில் தங்கள் பெற்றோருக்கு கிரீன் கார்டு திட்டத்தின் கீழ் அமெரிக்க குடியுரிமை பெற விண்ணப்பிக்க முடியும். இக்காரணத்துக்காகவே சீன பணக்காரர்கள் அமெரிக்க வாடகை தாய்களை விரும்புகின்றனர். அதற்காக அவர்களுக்கு ஒன்றரை இலட்சம் டொலர் வரை பணம் தருகின்றனர்.

No comments:

Post a Comment