Monday, 30 September 2013

சிறுநீரகக் கற்கள்

சிறுநீரகக் கற்கள்

சிறுநீரகத்தில் கல் உள்ளவர்களுக்கு தாங்க முடியாத அளவிற்கு வயிற்றுவலி ஏற்பட்டு. நாளடைவில் சிறுநீர்ப் பாதையில் தடையை உண்டாக்குகிறது. பால், தயிர், மோர் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளாவிட்டால் உடலில் கால்சியம் பற்றாக்குறை ஏற்படும். கால்சியத்தின் தேவை காரணமாக, குடல் அதிக அளவில் ஆக்ஸலேட்டை (Oxalate) ஈர்த்துக்கொள்ளும். இவ்வாறு ஈர்க்கப்பட்ட ஆக்ஸலேட் இரத்தத்தில் கலந்து சிறுநீரகத்தில் கற்களை ஏற்படுத்திவிடும். ஆண்டுக்கணக்கில் சிறுநீரகங்களின் உள்ளமைப்புக் கூறுகள் சேதமடைதல், சர்க்கரை நோய், உயர் இரத்தஅழுத்தம், நாள்பட்ட சிறுநீரகச் செயலிழப்பு போன்றவற்றால் உடலில் திரவம் மற்றும் தேவையற்ற வீணான பொருட்கள் சேர்ந்து இவை இரத்தத்திலும் அதிகரிப்பதினால் கற்கள் ஏற்படுகின்றன. அசோடிமியா என்பது எந்த அறிகுறியும் இன்றி இரத்தத்தில் யூமிரியா போன்ற நைட்ரஐன் பொருட்கள் அதிகரிப்பதாகும். யூமிரியா என்பது சிறுநீரகங்கள் செயல் இழப்பதினால் ஏற்படக்கூடிய நலவாழ்வுக் குறைவு ஆகும். அதிக அளவு வெப்பத்தால் உடலில் அதிகம் வியர்க்கிறது. வெளியேறும் வியர்வைக்கு ஏற்ற அளவில் தண்ணீர் குடிக்காவிட்டால், சிறுநீரகக் கற்கள் உருவாகிவிடுகின்றன. புரதச்சத்து, நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகளைத் தேவையான அளவு உட்கொள்வதில்லை. இவை சீறுநீரகக் கற்கள் உருவாகக் முக்கிய காரணங்களாகும்.

ஆதாரம் : தமிழ்வின்
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...