Saturday, 28 September 2013

மறக்கப்பட்ட குமரி தமிழன் : திரு.ஜே.சி.டேனியேல்

மறக்கப்பட்ட குமரி தமிழன் : திரு.ஜே.சி.டேனியேல்

கேரள சினிமாவின் தந்தையாக போற்றப்படும் நம் கன்னியாகுமரி மண்ணின் மைந்தனை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த திரு.ஜே.சி.டேனியேல் கன்னியாகுமரி மண்ணிலிருந்து (நாகர்கோவிலில்) கேரளாவின் முதல் திரைப்படமான "விகதகுமாரன்" - ஜ தயரித்து, இயக்கி, நடித்து கேரள சினிமாவின் தந்தையாக போற்றப்படுகிறார். இவர் பெயரில் கேரள அரசு வருடந்தோறும் "வாழ்நாள் சாதனையாளர்" விருது வழங்கி அவரை கௌரவப்படுத்துகிறது. சினிமா தயாரித்ததில் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியால் பின்பு மருத்துவம் படித்து டாக்டராக பணியாற்றி வயோதிக காலத்தில் அகஸ்தீஸ்வரத்திலேயே வாழ்ந்து இப்பூவுலகை விட்டு மறைந்தார். அவரது கல்லறை அகஸ்தீஸ்வரத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் சினிமாவின் நூற்றாண்டு நடக்கும் இத்தருணத்தில் அவரை நினைவு கூர்வோம்.
@Lelin Raj posted to சற்றுமுன் செய்திகள்

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...