Monday, 30 September 2013

14வயதுச் சிறுமி சவுக்கால் அடித்துக் கொலை:பங்களாதேசில் கொடூர தண்டனை

14வயதுச் சிறுமி சவுக்கால் அடித்துக் கொலை:பங்களாதேசில் கொடூர தண்டனை

Source: Tamil CNN
பங்களாதேசில் உள்ள ஷரியத்பூரை சேர்ந்த 14 வயது சிறுமி ஹீனா அக்தர். 7வது வகுப்பு படித்து வந்தாள். இவள் திருமணமான தனது உறவினர் மக்பூப்கான் என்பவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டதாக உள்ளூர் ஷரியத் கோர்ட்டில் விசாரணை நடத்தப்பட்டது.
முடிவில் அவர்கள் இருவரையும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து பொது மக்கள் முன்னிலையில் ஹீனா அக்தருக்கு 101 சவுக்கடியும், மக்பூப்கானுக்கு 201 சவுக்கடியும் தண்டனையாக விதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போது 70 சவுக்கடி வாங்கிய ஹீனா மயங்கி விழுந்து இறந்தார்.
அந்த நேரத்தில் தனது பெற்றாரிடம் நான் ஒன்றும் அறியாத அப்பாவி என கூறினாள்.மரணம் அடைந்த ஹீனாவின் உடல் புதைக்கப்பட்டது. ஆனால் தனது மகள் மீது அபாண்டமாக குற்றம் சாட்டி கொன்று விட்டதாக அவளது பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். மகபூப் நான் மலேசியாவில் வேலை பார்த்தார். அங்கிருந்து திரும்பிய அவர் தனது மகனின் வயது உறவினர் மகளான ஹீனா அக்தரின் மீது காமப் பார்வையை வீசினார். ஒரு நாள் அவளை பலவந்தமாக கற்பழித்தார். தனது இந்த தவறை மறைக்கவே ஹீனா அக்தரின் மீது கள்ளக்காதல் குற்றச்சாட்டை சுமத்தியதாக அவளது பெற்றோர் தெரிவித்துள்ளனர். எனவே, தனது மகளின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்தி உலகுக்கு உண்மையை தெரிவிக்க வேண்டும் என விரும்புகின்றனர்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...