Thursday, 23 May 2013

பற்கள் பற்றிய சில தகவல்கள்

பற்கள் பற்றிய சில தகவல்கள்

பிறக்கும் 2,000 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு பிறக்கும்போதே பல் இருக்குமாம்.  பிறந்த பிறகு முதன் முதலாக முளைக்கும் பற்கள் பால்பற்கள் என்றும், அவை விழுந்த பிறகு முளைக்கும் பற்கள் கோரைப்பற்கள் என்றும் கூறப்படுகிறது. குழந்தை பிறந்த 6வது மாதத்தில் முளைக்கத் துவங்கும் பற்கள் 3 வயதில் முழுமை பெறுகின்றன. 3 வயது குழந்தைக்குப் பொதுவாக 20 பற்கள் வளர்ந்திருக்கும். பிறகு 5 வயதிலிருந்து 6வது வயதில் பால்பற்கள் ஒவ்வொன்றாக விழத் துவங்கி 12 அல்லது 13வது வயதில் அனைத்துப் பால்பற்களும் விழுந்து கோரைப்பற்கள் அந்த இடத்தை நிரப்புகின்றன. சிலருக்கு பால்பற்கள் விழும் முன்பே கோரைப்பற்கள் முளைக்கத் துவங்கி விடுகின்றன. பலர் இரண்டு பற்களையும் ஒருசேரக் கொண்டிருப்பதும் உண்டு. நமது பற்களின்மீது இருக்கும் எனாமல்தான், நமது உடலிலுள்ள மிக கடினமான பகுதியாகும். மனிதர், உணவைக் கடிக்க, கிழிக்க, அரைக்க, மெல்ல என நான்கு விதமான பற்களைக் கொண்டுள்ளனர். ஒரு மனிதருக்கு இருப்பதுபோன்ற பற்கள், வேறு யாருக்கும் இருப்பதில்லை. நமது பற்களில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளால், உடலில் சில வியாதிகள் ஏற்படுவதும் உண்டு. நமது பல்லின் மூன்றில் ஒரு பங்கு ஈறுப் பகுதிக்குள் மூடியுள்ளது. அதாவது, மூன்றில் 2 பங்கு பல்லைத்தான் நம்மால் பார்க்க முடிகிறது. நலமான பற்கள் முழு வெள்ளை நிறத்தில் இருக்காது. சிறிது பழுப்பு நிறமாகவே இருக்கும். உமிழ்நீரில் உள்ள கால்சியம் மற்றும் உப்புச்சத்து, பற்கள்மேல் படியும்போது அவை காரையாக மாறிவிடுகின்றன.

ஆதாரம் : தினமணி

No comments:

Post a Comment