Sunday, 12 May 2013

குடல் புண் (அல்சர்)

குடல் புண் (அல்சர்)

வயிற்றிலே ஒன்றும் இல்லாதது போன்ற உணர்வும், பல்லைக் கடிக்கவேண்டும் என்ற உணர்வும் தோன்றுகிறதா? நெஞ்செரிச்சல் உள்ளதா? வயிற்றிலிருந்து புளிப்பு நீர் வாய் நிறைய எதுக்களிக்கிறதா? இவைகளுக்கு எல்லாம் நீங்கள் ஆம் என்று சொன்னால் உங்களுக்கு குடல் புண் இருக்கலாம்  என்கின்றனர் மருத்துவர்கள்.
இரைப்பையும் சிறுகுடலும் சேர்ந்த ஜீரணப் பகுதியின் உட்புறத்தில் மேற்பகுதியில் ஏற்படும் புண்ணை குடல் புண் என்கிறோம். ஜீரணப் பகுதிகள் எப்போதும் ஈரமாகவும் மூடப்படாமலும் இருக்கின்றன. இதனால் இரைப்பையில் ஜீரணத்துக்கு தேவைப்படும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தால் இவை பாதிப்புக்கு உள்ளாகின்றன. குடல் புண் வந்துள்ள சிலருக்கு இந்த அமிலம் அதிகமாகச் சுரப்பதும் உண்டு. இதை அமிலக் குடல் புண்நோய் என்றும் அழைக்கிறோம்.
புகைப்பிடித்தலையும், மது, காபி போன்ற பானங்களையும் தவிர்க்க வேண்டும். பின்-இரவு விருந்துகளைத் தவிர்க்க வேண்டும், இரவில் அதிக நேரம் விழித்திருக்கக் கூடாது, மனநிலையை தடுமாறவிடக்கூடாது, அவசரப்படக் கூடாது, கவலைப்படக் கூடாது, மருத்துவ ஆலோசனைகளை அலட்சியப்படுத்தக் கூடாது என்கின்றனர் மருத்துவர்கள்.
குடல் புண் உடையவர்கள், அமிலத்தை நடுநிலையாக்கும் மருந்துகளை அடிக்கடி சாப்பிட வேண்டும். முறையாக, இறுக்கம் இல்லாத வாழ்வைப் பின்பற்ற வேண்டும்.
எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், கவலைகள் குடல் புண்ணை அதிகப்படுத்தும்.

ஆதாரம் : சித்தர்கோட்டை
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...