சூப்பர் நோவா (Supernova)
சூப்பர்
நோவாவை வெடிக்கும் விண்மீன் கூட்டங்கள் எனச் சொல்லலாம். வான்வெளியில்
பெரியதாக உள்ள விண்மீன்கள் தங்களின் பரிணாம வளர்ச்சியின் முடிவில், தங்களிடமிருக்கின்ற
எரிபொருள் எரிந்து தீர்ந்தபின்னர் மாபெரும் அளவில் ஒளியாற்றலை வீசி
பேரொளியுடன் வெடித்துச் சிதறுகின்றன. இந்த வெடிப்பு ஹைட்ரஜன் குண்டின்
வெடிப்பு போல இருக்கும். இந்த விண்மீன்களின் ஈர்ப்பு விசையில் மாற்றம்
ஏற்படுவதனால், இவை கருங்குழியாக மாறுகின்றன. இம்மாற்றத்தை அடையும்முன்னர் அவற்றின் வெளிப்பகுதி, ஈர்ப்புநிலை ஆற்றலால் வெடித்துச் சிதறுகின்றது. இந்த வெடிப்புச் சிதறலை சூப்பர் நோவா என்று அழைப்பது வழக்கம். இலத்தீனில் Nova என்றால் "புதிது"
என்று பொருள். விண்ணில் ஒரு புதிய விண்மீன் மிகப் பேரொளியுடன் காணப்படுவதை
இது குறிக்கின்றது. மற்ற சாதாரண விண்மீன்களிலிருந்து பேரொளியுடன்
காணப்படும் இந்த வகை விண்மீன்களைப் பிரித்துக் காட்டும் விதத்தில் இந்த
விண்மீன்கள் சூப்பர் நோவா என அழைக்கப்படுகின்றன.
No comments:
Post a Comment