Tuesday, 15 December 2020

அருள்பணி ஸ்டான் சுவாமி உடனடியாக விடுவிக்கப்பட...

 இலண்டனிலுள்ள இந்திய தூதரகத்தின் முன்பாக, அமைதிவழி போராட்டம் - கோப்புப் படம், அக்டோபர், 2020.


இந்தியாவில், பயங்கரவாதம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில், அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், மிக வயதான மனித உரிமை ஆர்வலர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மும்பை சிறையில் அநீதியான முறையில் வைக்கப்பட்டிருக்கும், 83 வயது நிறைந்த இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், உடனடியாக விடுதலைசெய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, உலக மனித உரிமைகள் நாளான, டிசம்பர் 10, இவ்வியாழனன்று, இலண்டனில், அமைதிப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

கடந்த அக்டோபர் 9ம் தேதியிலிருந்து இந்தியாவில் சிறைவைக்கப்பட்டிருக்கும் அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், காலவரையறையின்றி உடனடியாக விடுதலைசெய்யப்படவேண்டும் என்று, இலண்டனிலுள்ள இந்திய தூதரகத்தின் முன்பாக, அமைதிவழி போராட்டம் ஒன்று நடைபெற்றது.

இலண்டனிலுள்ள இயேசு சபை மறைப்பணித்தளம், இதே கோரிக்கையை முன்வைத்து, இவ்வியாழனன்று இரண்டாவது முறையாக இந்த போராட்டத்தை நடத்தியுள்ளது என்றும், அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படுவதற்கு, உலக அளவில் வலியுறுத்தப்படவேண்டும் என்றும் விண்ணப்பிக்கப்பட்டதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

இதே கருத்திற்காக, 58 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களிடமிருந்து கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளன என்று கூறியுள்ள, இலண்டனிலுள்ள இயேசு சபை மறைப்பணித்தளம், இந்தியாவில், பயங்கரவாதம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில், அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், மிக வயதான மனித உரிமை ஆர்வலர் என்றும் கூறியுள்ளது.

அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், இந்தியாவின் பழங்குடி இன மக்களைப் பாதித்த விவகாரங்கள் தொடர்பாக, கடந்த ஐம்பது ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தவர். இவர், நரம்புத்தளர்ச்சி நோய் உட்பட, பல்வேறு உடல் நோய்களாலும் பாதிக்கப்பட்டுள்ளார். (CSW/ICN)

மேலும், 12 ஆயிரம் கைதிகள் தங்கக்கூடிய சிறை அமைப்புக்களைக் கொண்ட இலங்கையில் 34 ஆயிரம் கைதிகள் வைக்கப்பட்டுள்ளனர் என்றும், சிறைகள் சித்ரவதைக்கூடங்களாக இல்லாமல், மறுவாழ்வு மையங்களாக அமைக்கப்படவேண்டும் என்றும், அந்நாட்டு ஆங்கிலக்கன் சபை அருள்பணியாளர் Marimuttu Sathivel அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...