Tuesday, 15 December 2020

இறைவனுக்கான நம் ஆவலை ஆய்வு செய்யும் திருவருகைக்காலம்

 கிறிஸ்மஸ் குடிலுக்குமுன் திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் 2019


அன்னை மரியா, 'மகிழ்வின் காரணம்' என அழைக்கப்படுவது குறித்தும், வீடுகளில் கிறிஸ்துமஸ் குடிலின் முன் செபிக்கும்போது குழந்தை இயேசுவின் கனிவால் நாம் கவரப்படவேண்டும் எனவும் கூறும் டுவிட்டர் செய்திகள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

நம்மைச் சந்திக்கவரும் கிறிஸ்துவுக்காக நம்மையே தயாரிக்கும் காலம் இத்திருவருகைக்காலம் என்ற கருத்தை மையமாக வைத்து, இத்திங்கள் கிழமையன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நம்மைச் சந்திக்கவரும் இறைவனை வரவேற்பதற்கும், இறைவனின் வரவுக்காக நாம் கொண்டிருக்கும் ஆவலை ஆய்வு செய்யவும், கிறிஸ்து மீண்டும் வருவதற்கு நம்மைத் தயாரிக்கவும் கொடுக்கப்பட்டுள்ள காலமே, இத்திருவருகைக்காலம் என, திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி கூறுகிறது.

மேலும், இஞ்ஞாயிறன்று, தன் நண்பகல் மூவேளை செப உரையில் குறிப்பிட்ட கருத்துக்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரண்டு டுவிட்டர் செய்திகள் வழியே மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட முதல் டுவிட்டரில், அன்னை மரியா, 'மகிழ்வின் காரணம்' என அழைக்கப்படுவதன் விளக்கம் குறித்தும், இரண்டாவது டுவிட்டரில், வீடுகளில் கிறிஸ்துமஸ் குடிலின் முன் செபிக்கும்போது குழந்தை இயேசுவின் கனிவால் நாம் கவரப்படவேண்டும் எனவும் எடுத்தியம்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

No comments:

Post a Comment