Friday, 18 December 2020

பூமிக்கோளத்தின் இளம் நாயகர்களில் ஒருவராக, வித்யுத் மோகன்

 இளம் பொறியியலாளர் வித்யுத் மோகன்


இளம் பொறியியலாளர் வித்யுத் மோகன் அவர்கள் கண்டுபிடித்துள்ள ஓர் இயந்திரம், நிலத்திலிருந்து கிடைக்கும் கழிவுப்பொருள்களைக் கொண்டு விவசாயிகளுக்குத் தேவையான உரத்தையும், கூடுதல் எரிசக்தி தரும் நிலக்கரி போன்ற பொருள்களையும் உருவாக்குகிறது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்தியாவின் இளம் பொறியியலாளர் Vidyut Mohan அவர்களை, பூமிக்கோளத்தின் இளம் நாயகர்களில் ஒருவராக, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் அமைப்பான UNEP, டிசம்பர் 15, இச்செவ்வாயன்று அறிவித்துள்ளது.

அறிவியல், பொறியியல் ஆகிய துறைகளில், நீடித்து நிலைக்கும் முன்னேற்ற இலக்குகளை செயல்படுத்தும் ஏழு ஆர்வலர்களை உலகெங்கிலுமிருந்து அடையாளம் கண்டு, அவர்களுக்கு, ஐ.நா.வின் சுற்றுச்சூழல் அமைப்பு ஒவ்வோர் ஆண்டும் விருதுகள் வழங்கி வருகிறது.

2020ம் ஆண்டுக்குரிய விருதுகள் அறிவிக்கப்பட்ட வேளையில், இந்தியாவைச் சேர்ந்த வித்யுத் மோகன் அவர்களுடன், கென்யா, சீனா, கிரீஸ், பெரு, குவைத், அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஏழு இளையோர் இந்த விருதுக்கென தெரிவு செய்யப்பட்டனர் என்பதும் அறிவிக்கப்பட்டது.

காற்று மாசுப்பாட்டினால் துன்புறும் டில்லி மாநகரின் பிரச்சனைக்குத் தீர்வுகாணும் நோக்கத்துடன், இளம் பொறியியலாளர் வித்யுத் மோகன் அவர்கள் கண்டுபிடித்துள்ள ஓர் இயந்திரம், நிலத்திலிருந்து கிடைக்கும் கழிவுப்பொருள்களைக் கொண்டு விவசாயிகளுக்குத் தேவையான உரத்தையும், கூடுதல் எரிசக்தி தரும் நிலக்கரி போன்ற பொருள்களையும் உருவாக்குகிறது.

இதேபோல், கென்யாவில் வாழும் Nzambi Matee என்ற இளம் பெண் பொறியியலாளர், தான் செய்து வந்த வேலையைத் துறந்துவிட்டு, நகர்களில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு, பூமியில் பதிக்கக்கூடிய கற்களை உருவாக்கி வருகிறார்.

30 வயதுக்குட்பட்ட இந்த ஏழு இளம் நாயகர்கள் ஒவ்வொருவருக்கும் ஐ.நா. நிறுவனம் 10,000 டாலர்கள் பரிசாக வழங்கியுள்ளதோடு, சுற்றுச்சூழலை மேம்படுத்த அவர்கள் மேற்கொள்ளும் ஆய்வுகளில் கூடுதல் உதவிகள் செய்வதற்கும் முன்வந்துள்ளது.

வெளித்தோற்றத்தை வைத்து கணித்தால்...

வாகனங்கள்

ஒரு மனிதர் பார்ப்பதற்கு சாதாரணமாகத் தோன்றலாம், ஆனால் அவர் அழகான, அன்பு நிறைந்த உள்புறத்தை, இதயத்தைக் கொண்டிருக்கலாம்

மேரி தெரேசா: வத்திக்கான்

சில ஆண்டுகளுக்கு முன்பு, மனிதர் ஒருவர், நார்வே நாட்டில் Bodo என்ற நகரில் இருந்த நான்கு சக்கர வாகனங்கள் விற்கும் ஒரு பெரிய நிறுவனத்திற்குள் நுழைந்தார். அவர், அந்த நிறுவனத்திடம், எனக்கு உடனடியாகப் ஒரே மாதிரியான பதினாறு நான்கு சக்கர வாகனங்கள் வேண்டும் என்றார். அந்த நிறுவன உரிமையாளர், அந்த மனிதரை, ஏளனமாக ஏற இறங்கப் பார்த்தார். ஏனெனில் அவரின் தோற்றம், அவர் உடுத்தியிருந்த உடை போன்றவை மிகவும் சாதாரணமாக இருந்ததது. அவரிடம் அவர், “நகைச்சுவையாகப் பேசுவதற்கு இது நேரமல்ல!” என்று சொல்லி அவரை வெளியே அனுப்பி வைத்தார். அந்த மனிதரோ அதே நகரில் இருந்த வேறொரு நிறுவனத்திற்குச் சென்றார். அங்கிருந்தவரிடம் அவர் முன்பு சொன்ன அதையே சொன்னார். அவர் இவருக்கு உரிய மதிப்புக் கொடுத்து, இவர் கேட்ட ஒரே மாதிரியான பதினாறு நான்கு சக்கர வாகனங்களை, நாற்பத்து ஏழாயிராம் டாலர் விலைக்குக் கொடுத்து, நல்லமுறையில் இவரை வழியனுப்பி வைத்தார். இச்செய்தி அந்த மனிதர் முதலில் சென்ற, நான்கு சக்கர வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனத்தின் உரிமையாளருக்குத் தெரியவர, அவர் ‘வந்தவருடைய வெளித்தோற்றத்தைப் பார்த்துவிட்டு இப்படியொரு நல்ல வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டோமே!’ என்று மிகவும் வருந்தினார். உண்மையில், பதினாறு நான்கு சக்கர வண்டிகளை வாங்க வந்திருந்த அந்த மனிதர், பெரியதொரு மீன்பிடிக் கப்பல் ஒன்று வைத்திருந்தார். அதில் பதினாறு பேர் பணியாற்றி வந்தனர். அந்த ஆண்டு அவருக்கு நல்ல வருமானம் கிடைத்ததால், அவர் தன்னிடத்தில் பணியாற்றி வந்த அந்தப் பதினாறு பேருக்கும், ஆளுக்கொரு நான்கு சக்கர வாகனத்தைப் பரிசாக அளிக்க முடிவுசெய்து, அவற்றை வாங்கச் சென்றிருந்தார். ஆம். வெளித்தோற்றம் பலநேரங்களில் ஏமாற்றத்தையே அளிக்கின்றது. ஒரு மனிதர் பார்ப்பதற்கு சாதாரணமாகத் தோன்றலாம், ஆனால் அவர் அழகான, அன்பு நிறைந்த உள்புறத்தை, இதயத்தைக் கொண்டிருக்கலாம். எனவே, ஒரு மனிதரின் வெளித்தோற்றத்தை வைத்து அவரைக் கணிப்பது ஒருபோதும் சரியல்ல. 

நாம் விரும்பிய வடிவில் கடவுள் வருவதில்லை

 இயற்கையில் இறைவன் குடியிருக்கிறார்


நம்மைச் சுற்றி, நம் அருகிலேயே இருக்கும் இறைவனை, எங்கெங்கோ தேடி அலைந்து கொண்டிருக்கிறோம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

அறுபது வயது நிரம்பிய ஒருவர், ஞானி ஒருவரை அணுகி, 'இறைவன் என் குரலுக்கு இதுவரை செவிமடுத்ததே இல்லை' என்றார்.

 'ஏன் அப்படி சொல்கிறாய்' என்று கேட்டார் ஞானி.

அந்த மனிதர் சொன்னார், 'நான் சிறுவனாக இருந்தபோது, கடவுளே, என்னோடு பேசமாட்டாயா என்று, பலமுறை வேண்டினேன். பதிலில்லை. இளைஞனாக இருந்தபோது, உன்னை எனக்கு வெளிப்படுத்தமாட்டாயா எனக் கேட்டேன், அதற்கும் பதிலில்லை.  முதிர்ச்சி அடைந்து வரும் காலத்தில், இறைவா, எனக்கொரு அதிசயத்தை நிகழ்த்திக் காட்டு என நெஞ்சுருக வேண்டினேன், அதற்கும் பதிலில்லை. இறைவன் உண்மையிலேயே இருக்கின்றாரா என்ற சந்தேகம் வந்துவிட்டது' என்று.

ஞானி அவரிடம், 'குயில் கூவுவதை இரசித்திருக்கின்றாயா?, வானில் மின்னலுடன் இடி இடிக்கும்போது அதன் பிரமாண்டம் குறித்து எண்ணிப் பார்த்திருக்கின்றாயா?, உன் குழந்தைகள், மற்றும், பேரக்குழந்தைகளின் புன்சிரிப்பில் உன் அமைதியைக் கண்டிருக்கிறாயா? வண்ணத்துப்பூச்சியின் அழகில் மயங்கியிருக்கிறாயா? இதற்கு மேல் இறைவன் தன்னை எப்படி வெளிப்படுத்த முடியும்? இதற்கு மேல் என்ன அதிசயத்தை அவரிடமிருந்து எதிர்பார்க்கிறாய்? கடவுள் நம்மைச் சுற்றி சிறிய எளிமையான விடயங்களில் இருக்கிறார். கடவுள் நீ எதிர்பார்க்கும் வடிவில் வரமாட்டார். அவர் தன்னை வெளிப்படுத்தியுள்ளதை நாம்தான் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்’ என்று சொல்லி முடித்தார்.

ROBERT JOHN KENNEDY: தமிழக நாணய வரலாறு - ஒரு அறிமுகம்

ROBERT JOHN KENNEDY: தமிழக நாணய வரலாறு - ஒரு அறிமுகம்

ROBERT JOHN KENNEDY: பேசாத நாணயம் பேசும் வரலாறு! - இரா.மன்னர் மன்னன்

ROBERT JOHN KENNEDY: பேசாத நாணயம் பேசும் வரலாறு! - இரா.மன்னர் மன்னன்

ROBERT JOHN KENNEDY: ஏன் சமஸ்கிருத்தை எதிர்த்தது தமிழ்? Excellent speec...

ROBERT JOHN KENNEDY: ஏன் சமஸ்கிருத்தை எதிர்த்தது தமிழ்? Excellent speec...

ROBERT JOHN KENNEDY: ராஜராஜ சோழனை ஏன் கொண்டாட வேண்டும்? | மன்னர் மன்னன்...

ROBERT JOHN KENNEDY: ராஜராஜ சோழனை ஏன் கொண்டாட வேண்டும்? | மன்னர் மன்னன்...

ROBERT JOHN KENNEDY: தமிழ் இலக்கியங்கள் உண்மை என நிருபிக்கும் கல்வெட்டு...

ROBERT JOHN KENNEDY: தமிழ் இலக்கியங்கள் உண்மை என நிருபிக்கும் கல்வெட்டு...

ROBERT JOHN KENNEDY: Nakkan Pullan Inscription | நல்லமனார் கோட்டை | Tam...

ROBERT JOHN KENNEDY: Nakkan Pullan Inscription | நல்லமனார் கோட்டை | Tam...

தமிழக நாணய வரலாறு - ஒரு அறிமுகம்

பேசாத நாணயம் பேசும் வரலாறு! - இரா.மன்னர் மன்னன்

ஏன் சமஸ்கிருத்தை எதிர்த்தது தமிழ்? Excellent speech about Tamil vs Sanskrit

ராஜராஜ சோழனை ஏன் கொண்டாட வேண்டும்? | மன்னர் மன்னன், எழுத்தாளர் | கொடி பற...

தமிழ் இலக்கியங்கள் உண்மை என நிருபிக்கும் கல்வெட்டு | Pugalur Tamizhi ins...

Nakkan Pullan Inscription | நல்லமனார் கோட்டை | Tamil Navigation

Ship Launch of cruise ship Quantum of the Seas | Float Out at Shipyard

Top 10 Large Cruise Ships In Perfect Storm! Big Dangerous Waves at Sea

Tuesday, 15 December 2020

ROBERT JOHN KENNEDY: Singapore Church marks 200 years of evangelization

ROBERT JOHN KENNEDY: Singapore Church marks 200 years of evangelization:   The theme for the bicentenary celebrations, “Ignite and Shine with Faith”, invites all Catholics to join hands in forming a mor...

Singapore Church marks 200 years of evangelization

 St. Laurent  Imbert, founder of the Church of Singapore.


The theme for the bicentenary celebrations, “Ignite and Shine with Faith”, invites all Catholics to join hands in forming a more vibrant, evangelizing and missionary Church.

By Vatican News

The Catholic Church of Singapore is marking its 200 years by inviting all its faithful to renew their faith and relaunch their missionary zeal.  The yearlong jubilee celebration, dubbed Catholic200SG, officially kicked off on Sunday, December 13, with a virtual Mass by Archbishop William Goh of Singapore.  The inauguration included the launch of the jubilee website and the logo, and the screening of a documentary on the social impact of the Catholic Church in the smallest South-east Asian nation. 

Ignite and Shine with Faith

The theme for the jubilee year, “Ignite and Shine with Faith”, is in line with the pastoral vision of the Archdiocese of Singapore to shape a more vibrant, evangelizing and missionary Church.  Several events during the year will focus on renewing the faith of the Catholic community through four main actions: deepening, discerning, witnessing and celebrating. The celebrations will end on Dec. 11, 2021, with a Mass celebrated simultaneously in all of Singapore’s parishes.

With a population of about 5.6 million, Singapore is a multi-ethnic and multi-religious nation.  The Chinese are the largest ethnic group making up over 76 percent the population, followed by Malays (15 percent) and ethnic Indians (7.4 percent).  While most Chinese are Buddhists, most Malays are Muslims. Among other religions are Taoism and Hinduism. Christians comprise about 15 percent of the population.  The Archdiocese of Singapore has 360,000 Catholics spread across 32 parishes. 

Origins

British statesman and diplomat Sir Stamford Raffles is credited with founding modern Singapore in 1819 as a trading post of the British Empire.  Two years later, Father Laurent Ilbert, a French Catholic priest of the Paris Foreign Missions Society (MEP), set foot on its shore on Dec. 11, 1821.  This marked the beginning of Catholic Church in the port city. 

He was martyred on September 21, 1839, in Saenamteo, Korea, for refusing to reveal the whereabouts of other foreign missionaries during a time of Christian persecution in the country. He was among the 103 Korean martyrs that Saint Pope John Paul II canonized in Seoul, Korea, on May 6, 1984.

Looking at past, present and future

Speaking about the bicentenary celebrations in March, Archbishop Goh, said that the historic milestone would be an opportunity to galvanise Catholics for the past, present, and future.  “We want to celebrate with gratitude and thanksgiving how far we have come. We must empower our Catholics today to be vibrant in their faith and evangelise. And we should inspire all to work for a future when humanity and creation find completion in God,” he said.

During the jubilee celebrations, the Catholic community will attend prayers to collectively thank God for their missionary forefathers and contemplate the challenges of living out their faith today. At the parish level, churches will organize spiritual and community activities to deepen the faith of their communities.

Conferences, talks and events will be organized by Church organizations on various aspects of faith life and its impact on Singapore.  Topics will include education, business ethics, social responsibility, serving the poor, strengthening family relationships and interreligious dialogue.

Among the first events of the bicentenary celebrations is a virtual Christmas concert on Dec. 25. It will include a variety of sacred music in traditional and contemporary styles performed by choirs and musical talents from the parishes.

The jubilee year will culminate with an 8-day festival from Dec. 4-11, 2021. Most activities will take place in four Catholic locations — the Cathedral of the Good Shepherd, Church of Saints Peter and Paul, St. Joseph’s Church (Victoria Street) and the Catholic Centre (Waterloo Street).

A celebration for all Singaporeans

According to Father Valerian Cheong, co-chairman of the jubilee committee, “2021 will be a special year for Catholics in terms of the renewal of their faith.” “The celebration will also help them to appreciate the Church’s impact on the development of Singapore these past 200 years, especially in the fields of education, health care, social services and interreligious dialogue,” Father Cheong said.

He said the Church would like to invite all Singaporeans, not just Catholics, to join the jubilee initiatives to exchange ideas in order to create “a better and more caring society”.

John Paul II

When St. Pope John Paul II landed in Singapore on November 20, 1986, he became the first pontiff to step on Singaporean soil.  During the brief 5-hour visit, which was part of his Asia-Pacific trip to Bangladesh, Fiji, New Zealand, Australia and the Seychelles, he met the Singapore president and prime minister, and celebrated Mass for some 70,000 people at the National Stadium.  (Source: UCANEWS)

Ignite and Shine with Faith - Catholic200SG

ROBERT JOHN KENNEDY: இறைவனுக்கான நம் ஆவலை ஆய்வு செய்யும் திருவருகைக்காலம்

ROBERT JOHN KENNEDY: இறைவனுக்கான நம் ஆவலை ஆய்வு செய்யும் திருவருகைக்காலம்:   அன்னை மரியா, 'மகிழ்வின் காரணம்' என அழைக்கப்படுவது குறித்தும், வீடுகளில் கிறிஸ்துமஸ் குடிலின் முன் செபிக்கும்போது குழந்த...

ROBERT JOHN KENNEDY: உழவர்களின் போராட்டம் வெல்ல, தமிழக ஆயர்களின் ஆதரவு

ROBERT JOHN KENNEDY: உழவர்களின் போராட்டம் வெல்ல, தமிழக ஆயர்களின் ஆதரவு:   வேளாண் குடிமக்களின் கோரிக்கைக்கு இந்திய நடுவண் அரசு செவிமடுத்து, தற்போது நிறைவேற்றியிருக்கும் வேளாண் சட்டங்களை உடனே திரும்பப்பெ...

இறைவனுக்கான நம் ஆவலை ஆய்வு செய்யும் திருவருகைக்காலம்

 கிறிஸ்மஸ் குடிலுக்குமுன் திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் 2019


அன்னை மரியா, 'மகிழ்வின் காரணம்' என அழைக்கப்படுவது குறித்தும், வீடுகளில் கிறிஸ்துமஸ் குடிலின் முன் செபிக்கும்போது குழந்தை இயேசுவின் கனிவால் நாம் கவரப்படவேண்டும் எனவும் கூறும் டுவிட்டர் செய்திகள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

நம்மைச் சந்திக்கவரும் கிறிஸ்துவுக்காக நம்மையே தயாரிக்கும் காலம் இத்திருவருகைக்காலம் என்ற கருத்தை மையமாக வைத்து, இத்திங்கள் கிழமையன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நம்மைச் சந்திக்கவரும் இறைவனை வரவேற்பதற்கும், இறைவனின் வரவுக்காக நாம் கொண்டிருக்கும் ஆவலை ஆய்வு செய்யவும், கிறிஸ்து மீண்டும் வருவதற்கு நம்மைத் தயாரிக்கவும் கொடுக்கப்பட்டுள்ள காலமே, இத்திருவருகைக்காலம் என, திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி கூறுகிறது.

மேலும், இஞ்ஞாயிறன்று, தன் நண்பகல் மூவேளை செப உரையில் குறிப்பிட்ட கருத்துக்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரண்டு டுவிட்டர் செய்திகள் வழியே மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட முதல் டுவிட்டரில், அன்னை மரியா, 'மகிழ்வின் காரணம்' என அழைக்கப்படுவதன் விளக்கம் குறித்தும், இரண்டாவது டுவிட்டரில், வீடுகளில் கிறிஸ்துமஸ் குடிலின் முன் செபிக்கும்போது குழந்தை இயேசுவின் கனிவால் நாம் கவரப்படவேண்டும் எனவும் எடுத்தியம்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தையுடன் சுலோவாக்கியா குடியரசுத் தலைவர் சந்திப்பு

 திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்த, சுலோவாக்கியா அரசுத் தலைவர்  Zuzana Caputova


சுலோவாக்கியா நாட்டில் கத்தோலிக்க திருஅவை ஆற்றிவரும் சிறப்புப் பங்களிப்பு, குறிப்பாக, கல்வித்துறையில் ஆற்றிவரும் பங்களிப்பு குறித்து வத்திக்கான் சந்திப்பில் விவாதிக்கப்பட்டது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

சுலோவாக்கியா நாட்டின் குடியரசுத் தலைவர் Zuzana Čaputová அவர்கள், டிசம்பர் 14, இத்திங்களன்று காலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.

சுலோவாக்கியா தலத்திருஅவை, மற்றும், இன்றைய உலகச்சூழல்கள் குறித்து திருத்தந்தையுடன் பேசியபின், திருப்பீடத்தின் வெளியுறவுத்துறைச் செயலர், பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களையும் சந்தித்து கலந்துரையாடினார், அரசுத்தலைவர் Zuzana Čaputová.

பேராயர் காலகர் அவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது, சுலோவாக்கியா நாட்டில் கத்தோலிக்க திருஅவை ஆற்றிவரும் சிறப்புப் பங்களிப்பு, குறிப்பாக, கல்வித்துறையில்  ஆற்றிவரும் பங்களிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

கோவிட்-19 கொள்ளைநோய் உருவாக்கியுள்ள பாதிப்பு, இயற்கையைப் பாதுகாப்பதில் ஒன்றிணைந்து உழைக்கவேண்டியதன் அவசியம், சமுதாய நீதி, பன்னாட்டு அமைதி, ஐரோப்பிய வருங்காலம் போன்றவை குறித்த கருத்துப் பரிமாற்றங்கள், இச்சந்திப்புகளில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உழவர்களின் போராட்டம் வெல்ல, தமிழக ஆயர்களின் ஆதரவு

 புது தில்லியின் எல்லையில் போராடும் வேளாண் குடிமக்கள்


வேளாண் குடிமக்களின் கோரிக்கைக்கு இந்திய நடுவண் அரசு செவிமடுத்து, தற்போது நிறைவேற்றியிருக்கும் வேளாண் சட்டங்களை உடனே திரும்பப்பெற தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவை கேட்டுக்கொள்கிறது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

புது தில்லியில் போராடும் வேளாண் குடிமக்களின் கோரிக்கைக்கு, இந்திய நடுவண் அரசு செவிமடுத்து, தற்போது நிறைவேற்றியிருக்கும் வேளாண் சட்டங்களை உடனே திரும்பப்பெற, தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவை கேட்டுக்கொள்கிறது, என்ற சொற்களுடன், தமிழக ஆயர்கள், டிசம்பர் 9, இப்புதனன்று, அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

மதுரைப் பேராயரும், தமிழக ஆயர் பேரவைத் தலைவருமான பேராயர் அந்தோனி பாப்புசாமி அவர்கள் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள இவ்வறிக்கையில், நடுவண் அரசால், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் வேளாண் சட்டங்கள், இந்திய நாட்டின் வேளாண் மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் என்பதில் எவ்வித அய்யமுமில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இந்தச் சட்டம், இந்திய கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராகவும், மாநிலங்களின் சுயாட்சியை கேள்விக்குள்ளாக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், இந்தச் சட்டத்தால், மக்களாட்சியின் மிக முக்கிய பண்பான தெரிவு செய்யும் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது என்றும், தமிழக ஆயர்கள் கூறியுள்ளனர்.

வேளாண் குடிமக்கள், உடலுழைப்பைத் தந்து உற்பத்தி செய்யும் விளைபொருள்களின் விலையை, வேறு எவரோ நிர்ணயிப்பது, அவ்வாறு நிர்ணயிப்பது, 'கார்ப்பரேட்' என்று சொல்லப்படும் பன்னாட்டு பெரு நிறுவனங்களாக இருப்பது என்பதெல்லாம், இந்தியாவின் எதிர்காலத்தை இருள் சூழும் நிலைக்கு இட்டுச்செல்லும் என்பதை, இவ்வறிக்கை அழுத்தந்திருத்தமாகக் கூறியுள்ளது.

கோவிட்-19 கொள்ளைநோயின் அச்சங்களையும், கடும் குளிரையும் பொருள்படுத்தாமல், புதுடெல்லியின் எல்லையில், இரவு பகலென்று பாராமல் போராடும் வேளாண் குடிமக்களின் உறுதியை, தமிழக ஆயர்களின் அறிக்கை, பாராட்டியுள்ளது.

உழவர்கள் மேற்கொண்டுள்ள இப்போராட்டத்தில், அரசியல் எதுவும் திண்ணமாக இல்லை என்பதால், இதில் அரசியல் உள்நோக்கம் உண்டென்றும், எதிர்க்கட்சிகளின் தூண்டுதலால் நடைபெறுகிறது என்றும், ஆளும் அரசின் அமைச்சர்கள் கூறிவருவதை தவிர்க்கவேண்டும் என்று ஆயர்கள் கூறியுள்ளனர்.

மக்களாட்சியின் நியமங்களைப் பின்பற்றி, அறவழியே போராடிவரும் குடிமக்களின் குரலுக்கு அரசு செவிமடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடனும், உழவர்களின் போராட்டம் வெல்ல, தமிழக ஆயர் பேரவை தன் முழு ஆதரவை வழங்கும் என்ற உறுதியுடனும், பேராயர் பாப்புசாமி அவர்கள் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை நிறைவடைகிறது.

உதவித் தலைவர், ஆயர் நீதிநாதன், செயலர், ஆயர் தாமஸ் பால்சாமி, மற்றும் பொருளாளர் ஆயர் அந்தோனிசாமிஆகியோர் பொறுப்பில் இயங்கிவரும் தமிழக ஆயர்கள் பேரவை விடுத்துள்ள இந்த அறிக்கை, தமிழகத்தின் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அருள்பணி ஸ்டான் சுவாமி உடனடியாக விடுவிக்கப்பட...

 இலண்டனிலுள்ள இந்திய தூதரகத்தின் முன்பாக, அமைதிவழி போராட்டம் - கோப்புப் படம், அக்டோபர், 2020.


இந்தியாவில், பயங்கரவாதம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில், அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், மிக வயதான மனித உரிமை ஆர்வலர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மும்பை சிறையில் அநீதியான முறையில் வைக்கப்பட்டிருக்கும், 83 வயது நிறைந்த இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், உடனடியாக விடுதலைசெய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, உலக மனித உரிமைகள் நாளான, டிசம்பர் 10, இவ்வியாழனன்று, இலண்டனில், அமைதிப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

கடந்த அக்டோபர் 9ம் தேதியிலிருந்து இந்தியாவில் சிறைவைக்கப்பட்டிருக்கும் அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், காலவரையறையின்றி உடனடியாக விடுதலைசெய்யப்படவேண்டும் என்று, இலண்டனிலுள்ள இந்திய தூதரகத்தின் முன்பாக, அமைதிவழி போராட்டம் ஒன்று நடைபெற்றது.

இலண்டனிலுள்ள இயேசு சபை மறைப்பணித்தளம், இதே கோரிக்கையை முன்வைத்து, இவ்வியாழனன்று இரண்டாவது முறையாக இந்த போராட்டத்தை நடத்தியுள்ளது என்றும், அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படுவதற்கு, உலக அளவில் வலியுறுத்தப்படவேண்டும் என்றும் விண்ணப்பிக்கப்பட்டதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

இதே கருத்திற்காக, 58 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களிடமிருந்து கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளன என்று கூறியுள்ள, இலண்டனிலுள்ள இயேசு சபை மறைப்பணித்தளம், இந்தியாவில், பயங்கரவாதம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில், அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், மிக வயதான மனித உரிமை ஆர்வலர் என்றும் கூறியுள்ளது.

அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், இந்தியாவின் பழங்குடி இன மக்களைப் பாதித்த விவகாரங்கள் தொடர்பாக, கடந்த ஐம்பது ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தவர். இவர், நரம்புத்தளர்ச்சி நோய் உட்பட, பல்வேறு உடல் நோய்களாலும் பாதிக்கப்பட்டுள்ளார். (CSW/ICN)

மேலும், 12 ஆயிரம் கைதிகள் தங்கக்கூடிய சிறை அமைப்புக்களைக் கொண்ட இலங்கையில் 34 ஆயிரம் கைதிகள் வைக்கப்பட்டுள்ளனர் என்றும், சிறைகள் சித்ரவதைக்கூடங்களாக இல்லாமல், மறுவாழ்வு மையங்களாக அமைக்கப்படவேண்டும் என்றும், அந்நாட்டு ஆங்கிலக்கன் சபை அருள்பணியாளர் Marimuttu Sathivel அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

நீதி நிச்சயம் வெல்லும்

 கிரேக்க மெய்யியல் மேதை சாக்ரடீசுக்கு நஞ்சு கொடுக்கப்படுகிறது


நாட்டின் சட்டங்களை மதித்துச் செயல்பட வேண்டும் என்பதில் முழு நம்பிக்கை கொண்டவன் நான், அவ்வாறு செயல்படுபவனே உண்மையான குடிமகனாக இருக்க முடியும், ஒரு நல்ல குடிமகன் என்ற முறையில், நான் இறக்கத்தான் வேண்டும் - சாக்ரடீஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

கிரேக்க மெய்யியல் மேதை சாக்ரடீஸ் (கி.மு.470-399) அவர்கள், ஏதென்ஸ் நகரின் ஆட்சிக்குழு தலைவர்களுள் ஒருவராக இருந்த காலக்கட்டத்தில் ஆர்கினூசா போர் நடந்தது. அந்தப் போர் நடந்து முடிந்ததும், ஒருசிலர், பத்துக்கும் மேற்பட்ட படைவீரர்களைப் பிடித்துக்கொண்டு சாக்ரடீஸ் அவர்களிடம் வந்து, அந்த படைவீரர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என்று கேட்டனர். சாக்ரடீஸ் அவர்களோ அவர்களிடம், “இவர்கள் தவறு செய்ததற்கு எந்தவோர் ஆதாரமும் இல்லை. அப்படியிருக்கையில் இவர்களுக்குக் கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும் என்று சொல்வது எந்தவிதத்தில் நியாயம்! அப்பாவிகள் தண்டிக்கப்படுவதை எந்தவிதத்திலும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று கடுமையாகக் கூறினார். இதனால் அந்த ஒருசிலர், சாக்ரடீஸ் அவர்களை, ஆட்சிக்குழுத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கினர். அது மட்டுமல்லாமல், அவர் சிறையில் அடைக்கப்படவும், அவர்கள் காரணமாக இருந்தனர். ஏதென்ஸ் நீதிமன்றம், சாக்ரடீஸ் அவர்களுக்கு மரணதண்டனை வழங்கியபோது, சிறையில் அவரைச் சந்தித்த அவரது சீடர்கள், அவரைத் தப்பி ஓடிவிடும்படிக் கூறினார்கள். ஆனால் அவரோ, நாட்டின் சட்டங்களை மதித்துச் செயல்பட வேண்டும் என்பதில் முழு நம்பிக்கை கொண்டவன் நான்,  அவ்வாறு செயல்படுபவனே உண்மையான குடிமகனாக இருக்க முடியும், ஒரு நல்ல குடிமகன் என்ற முறையில் நான் இறக்கத்தான் வேண்டும் என்று சீடர்களிடம் சொல்லி, சிறையிலிருந்து தப்பியோட மறுத்துவிட்டார். பின்னர் அவர், சிறை அதிகாரிகள் கொடுத்த நஞ்சை குடித்து இறந்தார். இவ்வாறு, சாக்ரடீஸ் அவர்கள், எச்சூழ்நிலையிலும் நேர்மையின் பக்கமே இருந்தார். இன்றும், விவசாயப் பெருமக்கள், இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் உட்பட பலர் இந்தியாவிலும், உலகின் பல்வேறு பகுதிகளிலும், எவருக்கும், எதற்கும் அஞ்சாமல் நீதி, நேர்மைக்காகப் போராடி வருகின்றனர். நீதி வெல்லும், அநீதி வீழும்.

நற்செயல்களை ஆரம்பித்தால் போதுமே

 கரையில் ஒதுங்கியிருக்கும் நட்சத்திர மீன்


"எல்லா மீன்களையும் என்னால் காப்பாற்றமுடியுமா என்று தெரியவில்லை. ஆனால், இதோ, இந்த மீனை என்னால் காப்பாற்றமுடியும்" என்று சொன்னபடி, ஒரு மீனை எடுத்து கடலில் எறிந்தார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

ஒரு நாள் மாலை, ஓர் அறிவாளி, இந்த உலகத்தை எப்படி காப்பாற்றுவது என்பதைப்பற்றி ஆழ்ந்து சிந்தித்தவண்ணம், கடற்கரையில் நடந்துகொண்டிருந்தார். உலகின் பிரச்சனைகள், மலைபோல் அவர் மனதில் குவிந்திருந்ததால், எங்கு, எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல், குழம்பிப் போயிருந்தார். அவருக்கு முன், ஏழை மீனவர் ஒருவர், கடற்கரையில், எதையோ பொறுக்கியெடுத்து, கடலில் எறிந்துகொண்டிருந்தார். அறிவாளி கூர்ந்து கவனித்தபோது, அந்த மீனவர், கடற்கரையில் ஒதுங்கிக்கிடந்த சின்னச் சின்ன நட்சத்திர மீன்களை எடுத்து, கடலில் எறிந்ததைப் பார்த்தார். அவரை அணுகி, "என்ன செய்கிறீர் நண்பரே?" என்று கேட்டார் அறிவாளி. மீனவர் அவரிடம், "கடல் நீர்மட்டம் குறைந்துவிட்டதால், இந்த மீன்கள் கரையில் ஒதுங்கிவிட்டன. இவை இங்கேயே தங்கிவிட்டால், இறந்துவிடும். அதனால், இவைகளை மீண்டும் கடலுக்குள் அனுப்பிவைக்கிறேன்" என்றார். "அது தெரிகிறது. ஆனால், நீர் இப்படி செய்வதால் என்ன பயன்? இந்தக் கடற்கரையில் பல ஆயிரம் மீன்கள் கரையில் கிடக்கின்றன. அதேபோல், உலகத்தின் பல கடற்கரைகளில், பல கோடி மீன்கள் கிடக்கின்றனவே. நீர் இவ்வாறு செய்வதால், எத்தனை மீன்களைக் காப்பாற்றமுடியும் என்று நினைக்கிறீர்?" என்று கேட்டார். அந்த மீனவர், "எல்லா மீன்களையும் என்னால் காப்பாற்றமுடியுமா என்று தெரியவில்லை. ஆனால், இதோ, இந்த மீனை என்னால் காப்பாற்றமுடியும்" என்று சொன்னபடி, ஒரு மீனை எடுத்து கடலில் எறிந்தார்.

நல்ல செயல்களை யாராவது ஒருவர், எங்காவது ஓரிடத்தில், என்றாவது ஒரு நாள், எப்போதாவது ஒரு நேரம் ஆரம்பித்தால் போதுமே.

மண்வள உலகநாள், டிசம்பர் 05

 மண் வளத்தை ஆராயும் விவசாயி


உலகிலுள்ள பல்லுயிரின வகைகளில், 25 விழுக்காட்டுக்கும் மேலாக, பூமியில் வாழ்கின்றன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உணவு உற்பத்தி மற்றும், ஊட்டச்சத்து உணவுகளை அதிகரித்தல், மனிதரின் நலத்தைப் பாதுகாத்தல், காலநிலை மாற்றத்தைத் தடுத்தல் போன்றவற்றிற்கு, பூமியில் வாழ்கின்ற பல்லுயிர்கள் உதவுகின்றவேளையில், அவை பெரும்பாலும் குறைத்தே மதிப்பிடப்படுகின்றன என்று, FAO எனப்படும், ஐ.நா.வின் உணவு மற்றும், வேளாண்மை நிறுவனம், டிசம்பர் 04, இவ்வெள்ளியன்று கூறியது.

டிசம்பர் 05, இச்சனிக்கிழமையன்று, மண்வள உலகநாள் கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி, முதன்முறையாக, "மண்ணில் வாழும் பல்லுயிர்கள்" என்ற தலைப்பில், மண்வளம் பற்றிய அறிக்கை ஒன்றை வெளியிட்ட FAO நிறுவனம், மண்ணில் வாழும் பல்லுயிர்களும், மண்வள மேலாண்மையும், ஐ.நா.வின் நீடித்த நிலையான வளர்ச்சித்திட்ட இலக்குகளில் பலவற்றை எட்ட உதவுகின்றன என்று கூறியுள்ளது.

பல்லுயிர்கள் அழிந்துவருவது உலக அளவில் மிகுந்த கவலையை உருவாக்கியுள்ளது என்றுரைத்த, FAO நிறுவனத்தின் உதவி இயக்குனர் Maria Helena Semedo அவர்கள், உலகிலுள்ள பல்லுயிரின வகைகளில், 25 விழுக்காட்டுக்கும் மேலாக, பூமியில் வாழ்கின்றன என்று கூறினார்.

மேலும், பூமிக்கோளத்தின் சுற்றுச்சூழல் அமைப்புகளில் வாழ்கின்ற நாற்பது விழுக்காட்டுக்கும் அதிகமான பல்லுயிர்கள், சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றத்திற்கேற்ப தங்களின் வாழ்வையும் மாற்றுகின்றன என்றும், Semedo அவர்கள் கூறினார்.

மண்கள், மனிதரின் நல்வாழ்விற்கும், இப்பூமிக்கோளத்தின் வாழ்வைப் பேணுவதற்கும்  இன்றியமையாதவைகளாக இருந்தாலும், மனிதரின் செயல்பாடுகள், காலநிலை மாற்றம், மற்றும், இயற்கைப் பேரிடர்களால், அவை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன என்று, Semedo அவர்கள் கூறினார்.

FAO நிறுவனம், 2013ம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடத்திய கருத்தரங்கில் மண்வள உலகநாள் உருவாக்கப்படுமாறு பரிந்துரைக்கப்பட்டது. இந்த பரிந்துரையை ஏற்ற, ஐ.நா. பொது அவை, 2014ம் ஆண்டில், மண்வள உலகநாள், டிசம்பர் 05ம் தேதி சிறப்பிக்கப்படுமாறு கூறியது.

Tuesday, 1 December 2020

Vatican launches “A Light Has Shone” initiative for Christmas season

 Christmas in the Vatican


The Pontifical Academy for Life launches a campaign of Christmas greetings beginning from 1 December to spread a message of hope and peace to the world amid the ongoing health crisis.

By Fr. Benedict Mayaki, SJ

Starting Tuesday, the Pontifical Academy for Life will publish short videos of Christmas greetings made by the Academicians themselves with their smartphones to wish the world a Christmas of peace and hope.

The videos are part of the “A Light Has Shone” initiative promoted by the Pontifical Academy. They will be published on Twitter, YouTube and on the website of the Pontifical Academy for Life.

Bringing Christmas hope amid the health crisis

Archbishop Vincenzo Paglia, President of the Pontifical Academy of Life explained that “it is a simple initiative in its conception and realization that is meant to bring a message of hope, peace, brotherhood in this time of pandemic.”

At the same time, “it is a way that the Pontifical Academy for Life has chosen for Christmas to follow up on our ongoing work.”

“This pandemic questions us deeply in the light of the Gospel, with regard to our lifestyles, the change underway, the kind of society we want to build to start down the road of universal brotherhood,” Archbishop Paglia said in a statement released on Monday.

Self-made by Academy members

Holding her child in her arms in her own short self-made video contribution, Prof. Hye-Jin Kim from the University of Ulsan (South Korea) highlighted that “motherhood is the hardest thing especially in this pandemic.”

She sends her “respect and support to parents who are protecting their children with infinite love and sacrifice in the middle of the crisis” and extends her wishes for “a happy and healthy Christmas” to everyone.

An assessment of the year’s activities

The “A Light Has Shone – Christmas 2020 with the Pontifical Academy for Life” initiative also provides an opportunity “to draw up a brief assessment of the 2020 activities,” noted the statement.

This year’s activities began on 26 - 27 February with the Assembly dedicated to Artificial Intelligence and the signing of the “Rome Call for AI Ethics” by Microsoft President Brad Smith, IBM Vice President John Kelly III, FAO Director-General Qu Dongyu and Italian Minister for Innovation, Paola Pisano on 28 February.

The statement also pointed out that the Academy devoted two documents to the pandemic: the “Pandemic and Universal Brotherhood” document of 30 March and the “Humana Communitas in the Era of the Pandemic” of 22 July.

In addition, the Academy made use of its social channels to reach and inform large audiences. Between January to November, the Press and External Communication Office published 1,116 tweets (posts on the Twitter platform). In November alone, the tweets had 127,000 views, and in September, the tweets peaked at 336,000 views for 97 tweets.

Looking ahead to 2021, Archbishop Paglia affirms that the Academy intends to continue its reflection about the changes that the pandemic is imposing on our lifestyles.

“We are also preparing online appointments with our Academicians and we will hold the September 2021 Assembly in attendance. Other topics carefully observed concern palliative care and vaccines, which are now the litmus test of an ethical approach to global health,” the Archbishop said.

Pontifical Academy for Life

Dedicated to promoting and defending the Church’s consistent life ethic, the Pontifical Academy for Life was established in 1994 by Pope Saint John Paul II.

Currently, the Academy has 163 Academicians (professors, scientists, experts). 57% are from Europe, 13% from North America, 15% from Latin America, 9% from Asia, 5% from Africa and 1% from Oceania.

இயேசுவின் பாதையில் தொடர்ந்து நடக்க அழைப்பு

 திருத்தந்தையிடமிருந்து சிகப்பு தொப்பி பெறும், மால்ட்டா நாட்டைச் சேர்ந்த புதிய கர்தினால் Mario Grech (உலக ஆயர் பேரவையின் பொதுச் செயலர்)


திருத்தந்தை : நம் வரலாற்றின் ஒரு பகுதியாக இருக்கும் சிலுவையும், உயிர்ப்பும், நமது இன்றைய நிலை மட்டுமல்ல, நம் பயணத்தின் இறுதி நோக்கமுமாகும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கர்தினால்கள் அணியும் தொப்பியின் நிறம் சிகப்பாக இருப்பது, இவ்வுலகின் மதிப்புமிக்க தன்மையைக் குறிப்பிட அல்ல, மாறாக, அது இரத்தத்தின் நிறம், ஆகவே, இயேசுவின் பாதையில் தொடர்ந்து நடக்குமாறு புதிய கர்தினால்களுக்கு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

எட்டு நாடுகளைச் சேர்ந்த 13 பேரை கர்தினால்களாக உயர்த்தி, அவர்களுக்கு கர்தினால்களுக்குரிய தொப்பியையும் மோதிரத்தையும் வழங்கிய திருவழிபாட்டுச் சடங்கில் மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எருசலேம் செல்லும் வழியில் தன் பாடுகள், மற்றும், மரணம் குறித்து இயேசு விவரித்ததையும், சகோதரர்களான யாக்கோபுவும், யோவானும், இயேசு மகிமையில் வரும்போது தங்களுக்கு சிறப்பிடம் வழங்க வேண்டும் என கேட்டதையும் மையமாக வைத்து தன் சிந்தனைகளை வழங்கினார்.

நவம்பர் 28, இச்சனிக்கிழமையன்று மாலை, புனித பேதுரு பெருங்கோவிலில், இடம்பெற்ற இத்திருவழிபாட்டுச் சடங்கில், நம் வரலாற்றின் ஒரு பகுதியாக இருக்கும் சிலுவையும் உயிர்ப்பும், நமது இன்றைய நிலை மட்டுமல்ல, நம் பயணத்தின் இறுதி நோக்கமுமாகும், என உரைத்தார் திருத்தந்தை.

நாம் அனைவரும் கிறிஸ்துவைப் பின்பற்ற விரும்பினாலும், நம் உள்ளங்கள் கிறிஸ்துவின் பாதையைவிட்டு விலகிச்செல்லும் ஆபத்து உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, திருஅவை அதிகாரிகள், இறைவனுக்கும் மக்களுக்கும் நெருக்கமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

சரியான பாதையை விட்டு விலகி, காணாமல்போகும் ஆபத்திலிருக்கும் தன் நண்பர்களை, இயேசு, சிலுவை, மற்றும் உயிர்ப்பின் வழியாக தன்னிடம் கொண்டுவந்து சேர்க்கிறார் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடந்த அக்டோபர் மாதம் 25ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்த, 13 புதிய கர்தினால்களுள், புருனே, மற்றும், பிலிப்பீன்ஸ் நாடுகளைச் சேர்ந்த இருவர், கோவிட்-19 அரசு தடைகள் காரணமாக உரோம் நகர் வரமுடியாததால், இச்சனிக்கிழமையன்று நடைபெற்ற வழிபாட்டில் 11 கர்தினால்களே பங்குபெற்றிருந்தனர்.

இனவெறி என்பது, படைத்தவருக்கு எதிரான நிந்தனை

 கர்தினால் Gianfranco Ravasi


கர்தினால் இரவாசி : நாம் அனைவரும் ஒரே மனிதகுலமாக இருக்கையில், இனவெறி என்பது, மனித உறவுகளுக்கும், சமூக, மற்றும் ஆன்மீக நிலைகளுக்கும் எதிரானது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இன அடிப்படையிலான முற்சார்பு எண்ணங்களை எதிர்த்துப் போரிடுவதற்கு சிறந்தவழி, அடுத்தவரை நாடிச் செல்வதும், மனிதர்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை அங்கீகரித்து ஏற்பதுமாகும் என கூறினார் கர்தினால் Gianfranco Ravasi.

உரோம் நகரின் Lumsa பல்கலைக்கழகம், திருப்பீடக் கலாச்சார அவையின் பெண்களுக்கான பிரிவு, திருப்பீடத்திற்கான நாடுகளின் தூதரகங்கள் ஆகியவை இணைந்து, 'இனவெறியும், பெண்களும், கத்தோலிக்கத் திருஅவையும்' என்ற தலைப்பில் ஏற்பாடு செய்த, இணையவழி கருத்தரங்கில்  உரையாற்றியபோது, திருப்பீடக் கலாச்சார அவையின் தலைவர் கர்தினால் இரவாசி அவர்கள் இதனைக் குறிப்பிட்டார்.

மனிதவாழ்வின் புனிதத்தன்மையை பாதுகாக்கிறோம் எனக் கூறிக்கொண்டே, இனவெறியை ஏதாவது ஒருவகையில் ஏற்றுக்கொள்வது, சகித்துக்கொள்ளப்பட முடியாதது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் புதன் மறைக்கல்வியுரை ஒன்றில் கூறிய வார்த்தைகளுடன் தன் இணையவழி உரையைத் துவக்கிய கர்தினால் இரவாசி அவர்கள், நாம் அனைவரும் ஒரே மனிதகுலமாக இருக்கும்போது, இனவெறி என்பது, மனித உறவுகளுக்கும், சமூக, மற்றும் ஆன்மீக நிலைகளுக்கும் எதிரானது என்றார்.

இதே கருத்தரங்கில் இணைய வழி தொடர்புகொண்டு உரையாற்றிய, பாப்பிறை உர்பான் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், காங்கோ நாட்டவருமான அருள்சகோதரி Rita Mboshu Kongo அவர்கள்,  கல்வியின் துணைகொண்டு  இனவெறியை ஒழிக்கமுடியும் என்பதால், நல்லதொரு மனச்சான்றை மக்கள் மனதில் உருவாக்கும் நோக்கத்தில், மக்களை நன்முறையில் தயாரிக்கும் கல்விக்கு, திருஅவை முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

இதே கருத்தரங்கில், 'இனவெறி என்பது, இறைவனுக்கு எதிரான நிந்தனை' என்ற கருத்தை வலியுறுத்தி, திருப்பீடத்திற்கான பானமா நாட்டு தூதரும் உரையொன்று வழங்கினார்.

கொள்ளைநோயினால் காயமுற்றுள்ள இந்தியாவிற்காக...

 இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை திருஅவை தலைவர்கள்


இந்தியாவின் இலத்தீன் வழிபாட்டு முறை ஆயர்கள் பேரவை, திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறை, 'இந்திய ஒருங்கிணைப்பு ஞாயிறு' என்று கொண்டாடுகிறது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்தியாவின் இலத்தீன் வழிபாட்டு முறை ஆயர்கள் பேரவை, நவம்பர் 29ம் தேதி சிறப்பிக்கப்படும், திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறை, 'இந்திய ஒருங்கிணைப்பு ஞாயிறு' என்று கொண்டாடுகிறது.

2017ம் ஆண்டு, இந்த ஆயர் பேரவையின் 29ம் பொது அவை கூடிய வேளையில் எடுக்கப்பட்ட இந்த முடிவைத் தொடர்ந்து, மூன்றாம் முறையாக, இவ்வாண்டு நடைபெறும் ஒருங்கிணைப்பு ஞாயிறு, "நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்" என்ற சொற்களை, தன் மையக்கருத்தாக கொண்டுள்ளது.

கோவிட்-19 கொள்ளைநோயினால் மிகவும் காயமுற்றுள்ள இந்தியாவிற்கு ஒருங்கிணைப்பு ஞாயிறு ஆறுதலையும், செபத்தின் வலிமையையும் கொணரும் என்று தான் நம்புவதாக, இலத்தீன் வழிபாட்டு முறை ஆயர்கள் பேரவையின் தலைவர், பேராயர் Filipe Neri Ferrão அவர்கள் கூறினார்.

எத்தனை துன்பங்கள் வந்தாலும், கத்தோலிக்கத் திருஅவை, இவ்வுலகில் நற்செய்தியைப் பரப்பும் தன் இலக்கிலிருந்து பின்வாங்காது என்பதை வலியுறுத்திக் கூறிய பேராயர் Ferrão அவர்கள், உயிர்த்த இயேசு நம் உலகப் பயணத்தில் உடன்வருவது நமக்கு பெரும் உந்து சக்தியாக அமைந்துள்ளது என்று கூறினார்.

இந்தியாவின் இலத்தீன் வழிபாட்டு முறையைச் சேர்ந்த 132 மறைமாவட்டங்களின் 190 ஆயர்கள், CCBI எனப்படும் இலத்தீன் வழிபாட்டு முறை ஆயர்கள் பேரவையின் உறுப்பினர்கள். இலத்தீன் வழிபாட்டு முறையைச் சேர்ந்த 9294 பங்குத்தளங்களிலும், ஏனைய நிறுவனங்களிலும், 21,018 அருள்பணியாளர்கள், மற்றும் 564 குழுமங்களின் துறவியர் பணியாற்றுகின்றனர்.

வியப்பூட்டும் மனிதர்கள்!

 நேபாளத்தில் எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு உலக நாள் தயாரிப்பு

உலக அளவில் இன்று முதல், 2022ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஏறத்தாழ மூன்று இலட்சம் பேர் HIV நோய்க் கிருமிகளால் புதிதாகப் பாதிக்கப்படுவர். எய்ட்ஸ் நோய் தொடர்புடைய இறப்புகள், ஒரு இலட்சத்து 48 ஆயிரத்திற்கும் அதிகமாகும் - ஐ.நா.வின் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு

மேரி தெரேசா: வத்திக்கான்

ஒவ்வொரு நாளும் ஊடகங்களில் மனதிற்கு ஆறுதல் தருகின்ற, மகிழ்வை அளிக்கின்ற செய்திகளைவிட, மனதை அதிர்ச்சிக்குள்ளாக்கும் செய்திகளையே தடித்த எழுத்துக்களில் காண முடிகின்றது. நவம்பர் 28, இச்சனிக்கிழமையன்று, மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் வடகிழக்கிலுள்ள கிராமம் ஒன்றில், 110க்கும் மேற்பட்ட அப்பாவி விவசாயிகள், பயங்கரவாதிகளால் இரக்கமற்று கொல்லப்பட்டுள்ளனர் என்று, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் மனிதாபிமான அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் Edward Kallon அவர்கள், நவம்பர் 29, இஞ்ஞாயிறன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளார். முதலில் 43 பேர் கொல்லப்பட்டனர் என்று சொல்லப்பட்டவேளை, பின்னர் மேலும் குறைந்தது எழுபது விவசாயிகள் கொல்லப்பட்டனர் என்றும், Boko Haram எனப்படும் இஸ்லாம் தீவிரவாத அமைப்பைச் சார்ந்தவர்களே, இந்தப் படுகொலைகளை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது என்றும், Kallon அவர்களின் அறிக்கை கூறுகின்றது. நைஜீரியாவின் Borno மாநிலத்தில் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில், அம்மாநிலத்தின் தலைநகரான Maiduguriக்கு அருகில், Koshobe என்ற கிராமத்தில், பயங்கரவாதிகள், நெல் வயல்களில் வேலைசெய்துகொண்டிருந்த விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டும், கயிறுகளால் கட்டி, அவர்களின் கழுத்தை அறுத்தும் கொடூரமாக கொலைசெய்துள்ளனர். மேலும், சில விவசாயிகள் காணாமல்போயுள்ளனர், மற்றும், பெண்கள் சிலர் கடத்தப்பட்டுள்ளனர் என்றும் செய்திகள் கூறுகின்றன. இந்த ஏழை விவசாயிகள், பிழைப்புக்காக, தங்கள் சொந்த இடங்களைவிட்டு ஏறத்தாழ ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டு, வயல்களில் வேலை செய்தவர்கள் என்று கூறப்படுகிறது. கடந்த 2009ம் ஆண்டில் இருந்து அந்நாட்டில் போகோ ஹரம் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் நீடித்து வருகிறது. மேலும், இந்திய நடுவண் அரசு கொண்டுவந்துள்ள விவசாயச் சட்டங்களை எதிர்த்து, டெல்லி எல்லைகளில், ஒரு கோடியே 20 இலட்சம் விவசாயிகள்,96 ஆயிரம் விவசாய வாகனங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உலகில் வன்முறை, பயங்கரவாதம், இலஞ்சம், ஊழல், பாலியல் வன்கொடுமை உட்பட, எத்தனையோ தீமைகள் அதிகரித்துள்ள அதே காலகட்டத்தில், பல நல்ல செயல்களும் நடைபெறத்தான் செய்கின்றன. ஆனால் அவை, அதிகம் முன்னிலைப்படுத்தப்படுவதில்லை. அவற்றைப் பற்றிப் பலர் அறிவதும் இல்லை. அண்மையில், ராணி வார இதழில் வெளியான கட்டுரை ஒன்றில், பல நல்ல உள்ளங்கள் பற்றிய பதிவுகளை வாசிக்க நேர்ந்தது. அதில், ஒருவர், தன் நண்பர்களை வியப்படையச் செய்த அனுபவங்கள் சிலவற்றைப் பதிவுசெய்திருந்தார்.

ஆட்டோ ஓட்டுனரின் நற்பண்பு

எனது நண்பர் ஒருவர் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் அதிகாலை நான்கு மணிக்கு இரயிலில் வந்து இறங்கினார். அவர், வடபழனி தாண்டிப் போகவேண்டும். ஆட்டோ பிடித்தார். காலை நான்கரை மணிக்கெல்லாம் அவர் வீட்டு வாயிலுக்கு ஆட்டோ வந்துவிட்டது. ஆட்டோ கட்டணம் 230 ரூபாய்.  அவர் தனது பணப்பையை எடுத்துப் பார்த்தார். அதில் ஐந்நூறு ரூபாய் நோட்டுத்தான் இருந்தது. சில்லரை இல்லை. ஆட்டோ ஓட்டுநரிடம், ஐந்நூறு ரூபாயைக் கொடுத்து மீதியைக் கேட்டார். `ஐயா, நீங்கள்தான் முதல் சவாரி. என்னிடமும் சில்லரை இல்லையே?` என்றார் ஓட்டுநர். அதிகாலை நான்கரை மணிக்கு எந்தக் கடையும் திறந்திருக்காது. யாரிடம் போய்ச் சில்லரை வாங்குவது? என்று யோசித்த நண்பர், பெருமூச்சுடன், `சரி. மீதி உன்னிடமே இருக்கட்டும்` எனச் சொல்லிவிட்டார். ஆட்டோ ஓட்டுநர் அவரின் செல்பேசி எண்ணைக் கேட்டு வாங்கிக் கொண்டார். அன்று காலை பத்தரை மணி இருக்கும். நண்பரின் கைபேசியில் அந்த ஆட்டோ ஓட்டுநர் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார். சார், உங்களுக்கு நான் தரவேண்டிய மீதித்தொகை 270 ரூபாய்க்கு, உங்கள் கைபேசியில் ரீசார்ஜ் செய்துவிட்டேன்! நன்றி` என்று, அந்த குறுஞ்செய்தி இருந்தது. மிகுந்த வியப்படைந்த நண்பர் தன் கைபேசியையே தன் கண்ணில் ஒற்றிக்கொண்டார்.

விவசாயியின் பண்பு

எனது இன்னொரு நண்பர் குடும்பத்தோடு காரில் பெங்களூருவுக்குப் புறப்பட்டார். வழியில் சாப்பிடுவதற்கு உரிய உணவை டிபன் கேரியரில் எடுத்துக்கொண்டார். சாப்பாட்டு நேரம் வந்தபோது, அக்குடும்பத்தினர், காரை நிறுத்தி, எங்காவது அமர்ந்து சாப்பிட இடம் தேடினார்கள். ஒரு வயல்வெளியும், ஒரு கிணறும், அதன் அருகில் ஓர் ஆலமரமும் தென்பட்டன. அந்த ஆலமரத்தின் அடியில் அமர்ந்து சாப்பிட எண்ணிய குடும்பத்தினர் காரைச் சாலையோரமாக நிறுத்திவிட்டு, டிபன் கேரியரோடு மரத்தடிக்குச் சென்றார்கள்.  மரத்தடியில் ஏற்கெனவே அந்த வயலுக்குச் சொந்தக்காரரான ஒரு விவசாயி, தனது உணவைச் சாப்பிட தயார் செய்துகொண்டிருந்தார். கீழே ஒரு தட்டு. பக்கத்தில் ஒரு நெகிழி பாட்டிலில் தண்ணீர், மற்றும் உணவுப் பொட்டலம். வந்திருந்த குடும்பத்தினரை அன்போடு வரவேற்ற அந்த விவசாயி, இங்கேயே நீங்கள் சாப்பிடலாம் என்று கூறி, அருகேயிருந்த கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்துக் கொடுத்து, அவர்களுக்கு உதவினார். நண்பர் குடும்பமும் சாப்பிட்டு முடித்தது. அந்த விவசாயியும் தன் உணவை உண்டு முடித்தார். அச்சமயத்தில், எனது நண்பர் ஒரு விடயத்தைக் கவனித்தார். அந்த விவசாயி தான் பருகுவதற்குத் தன் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த தண்ணீரைத்தான் பயன்படுத்தினாரே அன்றி, அந்தக் கிணற்று நீரைப் பயன்படுத்தவில்லை. நண்பருக்கு வியப்பு. அப்போது எனது நண்பர் விவசாயியிடம், கிணற்று நீர் உப்புக் கரிக்காமல் நன்றாகத்தானே இருக்கிறது? கிணறும் உங்களுடையது தானே? அப்படியிருக்க நீங்கள் ஏன் கிணற்று நீரைப் பயன்படுத்தாமல் உங்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்திருக்கும் தண்ணீரைப் பயன்படுத்துகிறீர்கள்?` என்று கேட்டார். அதற்கு அந்த விவசாயி, கள்ளங்கபடமில்லாமல் புன்னகைத்தவாறு இவ்வாறே சொன்னார். `ஐயா! இந்தக் கிணறு என்னுடையதுதான். இதை வெட்டுவதற்காக வங்கியில் கடன் வாங்கினேன். அந்தக் கடன் இன்னும் தீரவில்லை. அது தீரும்வரை வயலில் பாய்ச்சுவதற்கு மட்டுமே கிணற்று நீரைப் பயன்படுத்துவது என்றும், வயல் பயன்பாட்டுக்குத் தவிர சொந்தப் பயன்பாட்டுக்கு இந்த நீரை எடுப்பதில்லை என்றும் நானும் என் மனைவியும் சேர்ந்து முடிவு செய்திருக்கிறோம். இப்படி இருந்தால்தான் கடனைச் சீக்கிரம் அடைக்க வேண்டும் என்ற அறிவு வரும் என, எனக்கு அறிவுறுத்தியவர் என் மனைவிதான். இன்னும் மூன்று நான்கு மாதங்களில் வங்கிக் கடனை அடைத்துவிடுவேன். அதன்பிறகு உங்களைப் போல், நானும் ஆனந்தமாக இந்தக் கிணற்று நீரைப் பருகத் தொடங்குவேன். அப்போது வீட்டிலிருந்து தண்ணீர் கொண்டுவருவது இருக்காது!`

பூக்கடை பாட்டி

ராணி வார இதழில் தனது நண்பர்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டுள்ள அந்த மனிதர், மற்றுமொரு நண்பருக்கு கிடைத்த அனுபவத்தையும் இவ்வாறு பதிவுசெய்திருந்தார். ஒருநாள், இரு சக்கர வாகனத்தில் அலுவலகத்திலிருந்து வந்துகொண்டிருந்த எனது நண்பர், அந்த வாகனத்தை வழியில் நிறுத்தி, அங்கு பூ விற்றுக்கொண்டிருந்த ஒரு பாட்டியிடம் இரண்டு முழம் மல்லிகைப் பூ வாங்கினார். அந்தப் பாட்டிக்கு முப்பது ரூபாய் கொடுக்க வேண்டும். இவரிடம் சில்லரை இல்லை. நூறு ரூபாய் நோட்டை நீட்டினார். அந்தப் பாட்டியிடமும் எழுபது ரூபாய் திருப்பிக் கொடுப்பதற்குச் சில்லரை இல்லை.  `நூறு ரூபாயை இன்றைக்கு வைத்துக்கொள்ளுங்கள் பாட்டி. நாளை இதே வழியில்தான் வருவேன். அப்போது உங்களிடம் மீதி எழுபது ரூபாயை வாங்கிக் கொள்கிறேன்!` என்றார் நண்பர். அப்போது அந்த பாட்டி, `தம்பி! நூறு ரூபாயை நீயே வைத்துக்கொள். நாளை இந்தப் பாதையில் வரும்போது முப்பது ரூபாயைத் தா. நீ என்னை நம்புவதுபோல் நானும் உன்னை நம்புகிறேன். நான் வயதானவள். திடீரென ஏதோ நேர்ந்து நான் காலமாகிவிட்டால், நேரே கடவுளிடம் போய்ச் சேர வேண்டும். உன் எழுபது ரூபாயைத் திரும்பத் தருவதற்காக நான் மறுபிறவி எடுக்கக் கூடாது!` என்று சொன்னார்.  இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற வியப்பு, இந்த அனுபவத்தை எதிர்கொண்டவர்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் ஏற்படத்தான் செய்கின்றது. இளம்பெண்ணின் பண்பு

அன்று பேருந்து ஒன்றில், பயணித்துக்கொண்டிருந்த இளம் பெண் ஒருவர் அருகில், பருமனான பெண் ஒருவர், பல பைகளுடன் போய் அமர்ந்தார். அவரது பருத்த உடலும் பைகளும் அந்த இளம் பெண்ணை நெருக்கிக்கொண்டிருந்தன. அந்த இளம் பெண்ணிற்கு அடுத்த பக்கத்தில் அமர்ந்திருந்த பயணி ஒருவர், உனக்கு இது சங்கடமாக இல்லையா என்று கேட்டார். அதற்கு அந்த இளம்பெண், புன்னகைத்தவாறு இவ்வாறு கூறினார்.

"நாம் சேர்ந்து பயணிக்கப்போவது மிகக் குறுகிய நேரம்தான். எனவே, இத்தகைய விடயத்திற்காக மரியாதை குறைவாகப் பேசுவதோ, வாதிடுவதோ தேவையற்றது. நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்கத்தானே போகிறேன்"

எய்டஸ் உலக நாள்

டிசம்பர் 1, இச்செவ்வாய், எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு உலக நாள். டிசம்பர் 2, புதன், அடிமைமுறை ஒழிப்பு உலக நாள். டிசம்பர் 3, வியாழன், மாற்றுத்திறனாளர் உலக நாள். தற்போது உலகம், கொரோனா தொற்றுக்கிருமி பாதிப்புகளைத் தடுப்பதில் மட்டும் ஒட்டுமொத்த கவனத்தைச் செலுத்தி வருவதால், இந்தியா போன்ற நாடுகளில் காசநோய், எய்ட்ஸ், மலேரியா தொடர்பான மரணங்கள் அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலக அளவில் இன்று முதல், 2022ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஏறத்தாழ மூன்று இலட்சம் பேர் HIV நோய்க் கிருமிகளால் புதிதாகப் பாதிக்கப்படுவர் என்றும், எய்ட்ஸ் நோய் தொடர்புடைய இறப்புகள், ஒரு இலட்சத்து 48 ஆயிரத்திற்கும் அதிகமாகும் என்றும், ஐ.நா.வின் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஆண்டில் ஒவ்வொரு நூறு வினாடிகளுக்கு, ஒரு குழந்தை அல்லது, இருபது வயதுக்குட்பட்ட ஒருவர் எய்ட்ஸ் நோயால் தாக்கப்பட்டார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமுதாயங்களால் புறக்கணிக்கப்படும், விளிம்புநிலைக்குத் தள்ளப்படும் எய்ட்ஸ் நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் போன்றோரை, நம் நல்ல பண்புகளால், பிறரன்புச் செயல்களால் அரவணைப்போம், ஆதரிப்போம். அவர்கள் மாண்புடன் வாழ உதவுவோம். கடவுள் கொடுத்த வெறும் களிமண்தான் நம் வாழ்க்கை. அதை அழகான சிலையாக மாற்றுவதும், தண்ணீரில் கரைத்து வீணாக்குவதும் அவரவர் கையில்தான் உள்ளது. நமது இவ்வுலக வாழ்வு எப்போது, எங்கு, எவ்வாறு முடியும் என்பது, கடவுளைத் தவிர, நம்மில் யாருக்குமே தெரியாது, அதனால் வாழ்கிற நாள்களை நல்ல பண்புகளால் நிறைத்து நறுமணம் பரப்புவோம்.

விழிப்புணர்வு உருவாக்கும் மாற்றம்

 பொற்காசுகள்


எப்போதும் விழிப்புணர்வோடு இருந்தால், ஆபத்திலிருந்து தற்காத்துக்கொள்ளலாம்

மேரி தெரேசா: வத்திக்கான்

அக்காலத்தில் வறுமையில் வாடிய புலவர் ஒருவர், அந்த நாட்டு அரசரின் அரண்மனைக்குச் சென்று, அரசரின் புகழ்பாடி, அதற்கு வெகுமதியாக பொற்காசுகளைப் பெற்று, தனது ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். போக்குவரத்து வாகன வசதிகள் இல்லாத அக்காலத்தில், அவரால், அன்றே அவரது ஊர்போய் சேர முடியவில்லை. இரவானது. எங்கே தங்குவது என்று சுற்றுமுற்றும் பார்த்தார், அங்கே ஒரு மரம் தெரிந்தது. பொற்காசுகளை வைத்திருந்த துணி முடிச்சை தலையணையாக வைத்துக்கொண்டு, அந்த மரத்தடியில் உறங்கத் தயாரானார் புலவர். அவர் படுத்து சிறிது நேரத்தில் அந்தப் பக்கமாய் திருடர்கள் வந்துகொண்டிருந்த ஒலிக்கோவையைக் கேட்டார். அத்திருடர்கள் பக்கத்து ஊரில் திருடிவிட்டு உல்லாசமாக ஆடிப்பாடி வந்துகொண்டிருந்தனர். தன்னிடம் வந்து, தனது துணிமுடிச்சைக் கேட்டால், பொற்காசுகளை இழக்கவேண்டியிருக்கும், பின்னர், தனது குடும்பம், பசி பட்டினியால் சாகுமே என்று புலவர் அச்சமுற்றார். அவர் நினைத்தது போலவே அத்திருடர்கள் அவரை மரத்தடியில் கண்டு அவரிடம் வந்து, ஏன் இங்கே இருக்கிறாய்? என்று அதட்டினர். அப்போது அவர், உள்ளுணர்வு பெற்றவராய், அருகில் இருந்த இடத்தைச் சுட்டிக்காட்டி, அங்கே, உள்ளே புளுக்கமாக இருந்தது, அதனால் சற்று காற்று வாங்கலாமே என, இந்த மரத்தடியில் படுத்திருக்கிறேன் என்றார். புலவர் சொன்னதைக் கேட்டதும், திருடர்கள் கண்சிமிட்டும் நேரத்திற்குள்ளாக, அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். ஏனெனில் புலவர் சுட்டிக்காட்டிய இடம், ஒரு புதைகுழி மைதானம். எப்போதும் விழிப்புணர்வோடு இருந்தால், ஆபத்திலிருந்து தற்காத்துக்கொள்ளலாம் என்பதை, இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது. தற்போதைய கொரோனா தொற்றுநோய் காலத்தில், விழிப்புடன் இருங்கள் என்ற விண்ணப்பத்தை அடிக்கடி கேட்டு வருகிறோம். ஆம். தன்னைப் பற்றிய விழிப்புணர்வு, மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும்.

செல்லமா வளர்த்தது தப்பா?

 இந்திய முதியோர் இல்லம் ஒன்றில்


பிள்ளைகள் கேட்டதையெல்லாம் கொடுத்துவிட்டு, அன்புக்காக, அவர்களிடமே, கடைசி காலத்தில் கையேந்தி நிற்கும் நிலைக்கு தள்ளப்படும் பெற்றோர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

"நான் சின்ன பையனா இருக்கிறப்போ அஞ்சு ரூபாய்க்கு ஒரு பிளாஸ்டிக் பொம்மை வாங்கி தர மாட்டாரு எனது அப்பா. ஆனா நம்ப பையனுக்கு ஆயிரம் ரூபாய்க்கு பொம்மை வாங்கி தந்தேன்", என்றார் கணவர். "ஆமா அதுக்கென்ன?" என்று கேட்டார் மனைவி.

"படிக்கிறப்போ எங்க அப்பா எனக்கு வாங்கித் தந்தது எல்லாம் பழைய புத்தகம். ஆனால் நான் நம்ம மகன் கிழிக்க கிழிக்க புது புது புத்தகமா வாங்கித் தந்தேன்" என தொடர்ந்தார் கணவர். "அதான் ஏற்கனவே சொல்லி இருக்கிறீங்களே" என்றார் மனைவி.

"படு கஞ்சத்தனமா இருந்து எங்களை வளத்தாரு எங்க அப்பா. ஆனா நான் நம்ப பையன் கேட்கிறதெல்லாம் வாங்கி கொடுத்து வளர்த்தேன்" என்று கணவர் கூற, "ஆமா ‘ஸ்மார்ட் போன்’ கூட வாங்கி கொடுத்தீங்க. அதான் பல தடவை சொல்லிட்டீங்களே" என இடைமறித்தார் மனைவி. "வசதியே இல்லாம என்னை வளர்த்தாலும், என்னை பெத்தவங்கள நான் உயர்ந்த இடத்தில வச்சி அழகு பார்த்தேன்", என்று பெருமைப்பட்டார் கணவர்.

"நீங்க எல்லா வசதியோடும் பிள்ளையை வளர்த்தும், அவன் நம்மை இந்த முதியோர் இல்லத்துல வச்சி அழகு பார்க்கிறான். ரொம்ப செல்லமா வளர்த்ததும் தப்பு போல. உங்க அப்பா கண்டிப்பா வளர்த்து, அதன் பலனை அனுபவிச்சுட்டு சந்தோசமா போயிட்டாரு. நீங்களோ, அவன் கேட்டதையெல்லாம் கொடுத்துட்டு, இப்போ அன்புக்காக அவன்கிட்டேயே கையேந்தி நிற்கும் நிலைக்கு வந்திருக்கீங்க. எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேணும்", என்று சொல்லி அடக்க முடியாமல் அழுதார் அந்த தாய், தன் கணவனின் நிலையை நினைத்து.

செருப்பு தைப்பவரின் போதனை

 செருப்பு தைப்பவர்


மற்றவர்களுடைய கருத்துக்களையெல்லாம், உங்கள் தலையில் சுமந்துகொண்டிருக்கும் நீங்கள், மற்றவர்களுடைய செருப்பை, உங்கள் காலில் அணியக் கூடாதா?

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

அவர் அதிகம் படித்தவர். அடுத்தவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதில் அவருக்கு ஆர்வம் அதிகம். ஏராளமான நூல் நிலையங்கள் ஏறி இறங்கியிருக்கிறார். ஏராளமான புத்தகங்கள் படித்துள்ளார். அறிவில் தனக்கு நிகர் எவருமில்லை என்ற கர்வம் அவருக்கு இருந்தது.

ஒரு நாள் நூலகத்திலிருந்து வரும் வழியில், அவருடைய செருப்பு அறுந்துவிட்டது. வழியில் இருந்த செருப்புத் தைப்பவர் ஒருவரிடம் கொடுக்க, அவர், அதை சரிசெய்ய ஒரு நாள் ஆகும் என்றார். ஒரு நாள் முழுவதும் செருப்பின்றி எவ்வாறு நடப்பது என்று அவர் கேட்க, செருப்புத் தைப்பவர்,  வேறொருவருடைய செருப்பை ஒரு நாளைக்குத் தருவதாகக் கூறினார்.

''மற்றவர் செருப்பை என் காலில் அணிவது எப்படி?'' என்றார் அவர் கோபத்துடன். செருப்புத் தைப்பவர் அவரிடம், '' மற்றவர்களுடைய கருத்துக்களையெல்லாம், உங்கள் தலையில் சுமந்துகொண்டிருக்கும் நீங்கள், மற்றவர்களுடைய செருப்பை, உங்கள் காலில் அணியக் கூடாதா?'' என்று மறுகேள்வி கேட்டார்.

அன்று அவர் முதல்முறையாக சுயமாக சிந்திக்கத் தொடங்கினார். ஒரு புத்தகத்தைப் பார்ப்பது போல், அந்தத் தொழிலாளியைப் பார்த்தார். அவர் கைகள் செருப்புத் தைத்துக் கொண்டிருந்தன, அவர் சொன்ன வார்த்தைகளோ, இவர் நெஞ்சைத் தைத்துக் கொண்டிருந்தன.

தலைக்கனம் மெல்ல தரைக்கு வர ஆரம்பித்தது.

 

நன்றியுடன் வாழ்வதே நலம்

 வயது முதிர்ந்த பெண்மணியைச் சந்தித்துப் பேசும் இளைஞர்


"நான் பார்க்கமுடியாமல், கேட்கமுடியாமல் கிடந்தாலும், நீ என்னை தினமும் பார்க்கவருவாய் என்ற எண்ணமே எனக்குப் போதும். அதற்காக நான் இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும்" என்று அப்பெண்மணி அமைதியாகச் சொன்னார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

முதியோர் இல்லம் ஒன்றில், நோயுற்று படுத்திருந்த, வயதான பெண்மணி ரோசி அவர்களின் உடலில், ஒவ்வொரு பகுதியாக செயலிழந்து வந்தது. அவ்வில்லத்தில் பணியாற்றச்சென்ற ஓர் இளைஞர், ரோசி அவர்களிடம் காணப்பட்ட மகிழ்வைக்கண்டு ஆச்சரியமடைந்தார். நேரம் கிடைத்தபோதெல்லாம், அந்த இளைஞர், ரோசி அவர்களைச் சந்தித்துப் பேசினார்.

நாளடைவில், ரோசி அவர்களால், தன் கைகளையும், கால்களையும் அசைக்கமுடியாமல் போனது. "என் கழுத்தை அசைக்கமுடிகிறதே, அதற்காக நான் இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும்" என்று அவர் கூறிவந்தார். ஒருவாரம் சென்று, ரோசியால் தன் கழுத்தையும் அசைக்கமுடியவில்லை. "என்னால் பார்க்கவும், கேட்கவும் முடிகிறதே,  அதற்காக நான் இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும்" என்று ரோஸி புன்சிரிப்புடன் கூறியது, இளையவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

"உங்களால் பார்க்கவும், கேட்கவும் முடியாமல் போனால் என்ன செய்வீர்கள்?" என்று அந்த இளைஞர் ரோஸியிடம் கேட்டார். அதற்கு அவர், "நான் பார்க்கமுடியாமல், கேட்கமுடியாமல் கிடந்தாலும், நீ என்னை தினமும் பார்க்கவருவாய் என்ற எண்ணமே எனக்குப் போதும். அதற்காக நான் இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும்" என்று அமைதியாகச் சொன்னார்.

இல்லாததை எண்ணி, ஏக்கத்தில் வாழ்வதைவிட, உள்ளதை எண்ணி, நன்றியுடன் வாழ்வது மேல்.

பெரிய செல்வந்தர் யார்?

 கடவுளுக்கு  நன்றி சொல்லும் முதியவர்


யார் ஒருவர் தனக்குக் கிடைப்பதில் மனநிறைவுகொண்டு, அதற்காக அவரால் கடவுளுக்கு நன்றி சொல்ல முடிகிறதோ அவர்தான் இந்த உலகத்திலேயே பெரிய பணக்காரர்

மேரி தெரேசா: வத்திக்கான்

ஓர் ஊரில் பெரிய செல்வந்தர் ஒருவர் இருந்தார். அந்த ஊரில் அவருடைய நிலங்களை குத்தகைக்கு வாங்கி விவசாயம் செய்பவர்களில், வயது முதிர்ந்த ஒருவரை அவருக்கு மிகவும் பிடிக்கும். ஏனெனில் ஆண்டின் இறுதியில், அவருக்குச் சேரவேண்டிய பணத்தை, எந்த பிரச்சனைகள் பற்றியும் புலம்பாமல் செலுத்தி வந்தவர், அந்த முதியவர் மட்டுமே. ஒருநாள் அந்த செல்வந்தர், தனது குத்தகை நிலங்களைப் பார்வையிட வந்தபோது, அந்த முதியவர் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தினார். அப்போது செல்வந்தர் அவரிடம், இப்போது என்ன செய்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அவர், எல்லா வேலைகளையும் முடித்து, பழைய கஞ்சியை சாப்பிடப்போகிறேன். அதற்குமுன் அதைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லப்போகிறேன் என்றார். அப்போது செல்வந்தர் அவரிடம், பழைய சோற்றைச் சாப்பிடும் அளவுக்கு எனக்கு ஒரு நிலைமை வந்தால், அப்போது நான் கடவுளுக்கு நன்றி சொல்லமாட்டேன் என்றார். அப்போது அந்த முதியவர், ஐயா, எனக்குத் தேவையானதைக் கொடுக்கக்கூடிய கடவுளுக்கு நான் எப்போதுமே நன்றியுடையவனாகத்தான் இருப்பேன் என்று சொன்னார். பின்னர், முதியவர் அவரிடம், ஐயா, நேற்று இரவு என் கனவில் ஒரு தேவதை வந்து, இன்று இரவு இந்த ஊரில் மிகப்பெரிய செல்வந்தர் ஒருவர் இறந்துவிடுவார் என்று சொன்னது, இதற்கு அர்த்தம் தெரியவில்லை என்றார். அப்போது செல்வந்தர், அந்த கனவு தனக்குச் சொல்லப்பட்டது என்று மனதிற்குள்ளே நினைத்து, கனவை நம்புவது முட்டாள்தனம், அதை அப்படியே விட்டுவிடுங்கள் என்று சொல்லிவிட்டு வீட்டுக்குத் திரும்பினார். பின்னர் அந்த செல்வந்தர், அந்தப் பகுதியிலே புகழ்பெற்ற மருத்துவர் ஒருவரை அழைத்து தன்னைப் பரிசோதிக்கும்படிக் கூறினார். மருத்துவரும், உடலில் எந்தக் குறையும் இல்லை என்று சொன்னார். அப்போது செல்வந்தர் மருத்துவரிடம், இன்று இரவு முழுவதும், என்னோடு தங்கி இருங்கள், மறுநாள் காலையில் நான் நலமாக இருந்தால் நீங்கள் போகலாம் என்று கூறினார். அதுபோலவே மறுநாள் செல்வந்தரும் நலமாக இருந்தார். அதனால் மருத்துவரையும் மகிழ்வோடு வழியனுப்பி வைத்தார் செல்வந்தர். அவர் சென்றபின்னர் செல்வந்தரின் வாகன ஓட்டுனர் அவரிடம் வந்து, ஐயா, நேற்று நாம் பேசிக்கொண்டிருந்த அந்த முதியவர் இன்று இரவு இறந்துவிட்டார் என்று சொன்னார். அப்போது செல்வந்தர், இந்த ஊரில் பெரிய செல்வந்தர் நான் அல்ல, யார் ஒருவர் தனக்குக் கிடைப்பதில் மனநிறைவுகொண்டு, அதற்காக அவரால் கடவுளுக்கு நன்றி சொல்ல முடிகிறதோ அவர்தான் இந்த உலகத்திலேயே பெரிய பணக்காரர் என்பதை உணர்ந்தார். (நன்றி- சுல்தானா பர்வீன்)

ROBERT JOHN KENNEDY: இப்படிக்கு காலம்: உலகெங்கும் பரவிய தமிழ் வானொலிகள்...

ROBERT JOHN KENNEDY: இப்படிக்கு காலம்: உலகெங்கும் பரவிய தமிழ் வானொலிகள்...

இப்படிக்கு காலம்: உலகெங்கும் பரவிய தமிழ் வானொலிகள் - வானொலியின் வரலாறு |...

ROBERT JOHN KENNEDY: இப்படிக்கு காலம்: உலகெங்கும் பரவிய தமிழ் வானொலிகள்...

ROBERT JOHN KENNEDY: இப்படிக்கு காலம்: உலகெங்கும் பரவிய தமிழ் வானொலிகள்...

ROBERT JOHN KENNEDY: இப்படிக்கு காலம்: பூம்புகார் -வங்கக் கடலில் தூங்கு...

ROBERT JOHN KENNEDY: இப்படிக்கு காலம்: பூம்புகார் -வங்கக் கடலில் தூங்கு...

இப்படிக்கு காலம்: உலகெங்கும் பரவிய தமிழ் வானொலிகள் - வானொலியின் வரலாறு |...

இப்படிக்கு காலம்: பூம்புகார் -வங்கக் கடலில் தூங்கும் சோழநாட்டின் நுழைவாய...

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...