Saturday, 16 March 2019

செடிகள் ஏற்றுமதியில் சாதனை

செடிகள் ஏற்றுமதியில் சாதனை செர்ரி பழ மரம் பூத்துக் குலுங்கும்  காட்சி

சிங்கப்பூரில், மூலிகை வகைத் தாவரங்களையும், மாலத்தீவில், பழமரக் கன்றுகளையும், துபாய், கத்தார் நாடுகளில், அலங்காரப் பூச்செடிகளையும் மக்கள் விரும்புகின்றனர் என்கிறார், வெளிநாடுகளுக்கு தரமான செடிகளை உற்பத்தி செய்து அனுப்பும் கார்த்திக் குமார்.
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
மதுரை கோச்சடையை சேர்ந்த கார்த்திக் குமார் அவர்கள், விவசாய படிப்பில் முதுகலை பட்டம் பெற்று, லோட்டஸ் நர்சரி கார்டன் நடத்தி வருகிறார். நர்சரி என்றால் உள்ளூரில் செடி வளர்த்து உள்ளூரில் விற்பனை செய்வது மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் தரமான செடிகளை உருவாக்கி அனுப்புகிறார்.
2003ம் ஆண்டிலிருந்து செடிகளை ஏற்றுமதி செய்ய ஆரம்பித்த இவர், செடிகளை அனுப்பும்போது, மண்ணுடன் அனுப்பபக்கூடாது. அவ்விதம் அனுப்புகையில், பூச்சி, நோய்த்தொற்று, பிற நாட்டு செடிகளுக்கு பரவும் என்பதால், மண் இல்லாமல், சுத்தம் செய்யப்பட்ட தேங்காய் நார் கழிவுத் துகள்களோடு செடிகளை அனுப்பவேண்டும், என்கிறார் கார்த்திக் குமார். “சிங்கப்பூருக்கு மூலிகை வகைத் தாவரங்கள், மருத்துவ குணம் நிறைந்த செடிகளை அனுப்புகிறேன். மாலத்தீவில் பழமரக்கன்றுகள், பூச்செடிகள், இலைத் தாவரங்கள் என அனைத்து வகைகளையும் விரும்பி வாங்குகின்றனர். துபாய், கத்தார் நாடுகளில் அலங்கார பூச்செடிகள்தான் அதிகம் வாங்குகின்றனர். எந்தெந்த நாடுகளில் என்னென்ன தேவை என்பதை ஆய்வு செய்து, அதற்கேற்ப விமானம் மூலம் அனுப்புகிறோம்” என்கிறார், கார்த்திக் குமார். இம்முறையில், மா, கொய்யா, சப்போட்டா, நாவல், பப்பாளி, வாழை, ஆகிய மரக் கன்றுகளும், பலவகை பூச்செடிகளும் அனுப்பப்படுகின்றன.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...