புனித பிரான்சிஸ், சுல்தான் அல்-கமில் சந்திப்பின் 800 ஆண்டுகள்
அசிசி நகர்
புனித பிரான்சிஸ், சுல்தான் அல்-மலிக் அல்-கமில் அவர்களை சந்தித்த
நிகழ்வின் 8வது நூற்றாண்டு, மார்ச் 1ம் தேதி முதல் 3ம் தேதி முடிய எகிப்து
நாட்டில் கொண்டாடப்படுகிறது
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
அசிசி நகர் புனித பிரான்சிஸ், சுல்தான் அல்-மலிக் அல்-கமில் அவர்களை சந்தித்த நிகழ்வின் 8வது நூற்றாண்டு, மார்ச் 1ம் தேதி முதல் 3ம் தேதி முடிய எகிப்து நாட்டில் கொண்டாடப்படுவதையொட்டி, இந்நிகழ்வில் பங்கேற்க, கர்தினால் லியோனார்தோ சாந்த்ரி அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் பிரதிநிதியாக நியமித்துள்ளார்.
கீழை வழிபாட்டு முறை பேராயத்தின் தலைவரான கர்தினால் சாந்த்ரி அவர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள இந்த நியமன மடலில், "உங்களுக்கு இறைவனின் சமாதானம்" என்று, அசிசி நகர் புனித பிரான்சிஸ், பயன்படுத்திய வாழ்த்துரையை நினைவுகூர்ந்துள்ளார்.
1219ம் ஆண்டு, அசிசி நகர் புனித பிரான்சிஸ், சுல்தான் அல்-மலிக் அல்-கமில் அவர்களை சந்தித்த நிகழ்வின் 8ம் நூற்றாண்டு நிறைவை, எகிப்தில் பணியாற்றும் பிரான்சிஸ்கன் துறவு சபையினரும், தலத்திருஅவையும் இணைந்து கொண்டாடுகின்றன.
மேலும், திருத்தந்தையின் தர்மப்பணிகளுக்குப் பொறுப்பாக இருக்கும் கர்தினால் கொன்ராட் கிராஜுவ்ஸ்கி (Konrad Krajewski) அவர்கள், மத்திய ஆப்ரிக்க குடியரசின் தலைநகர், பாங்கியில் (Bangui) அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் மருந்தகம் ஒன்றை, மார்ச் 2, இச்சனிக்கிழமையன்று திறந்து வைக்கிறார் என்று வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romano கூறியுள்ளது.
2015ம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பாங்கியில் இரக்கத்தின் யூபிலி ஆண்டைத் துவக்கி வைத்த வேளையில், அந்நகரை இரக்கத்தின் தலைநகரம் என்று குறிப்பிட்டார்.
2017ம் ஆண்டு, அந்நகரில், திருப்பீடமும், உரோம் குழந்தை இயேசு மருத்துவமனையும் இணைந்து, குழந்தைகள் மருந்தகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டின.
அந்த மருந்தகம் முழுமையாக்கப்பட்டுள்ள நிலையில், மார்ச் 2ம் தேதி, இந்த மருந்தகத்தை திறக்க, கர்தினால் கிராஜுவ்ஸ்கி அவர்கள், பாங்கி நகருக்கு, இவ்வியாழனன்று புறப்பட்டுச் சென்றார்.

No comments:
Post a Comment