Thursday, 3 January 2019

கடவுளை, முட்டாள் என்று கூறுபவர், எதிர் கிறிஸ்து

கடவுளை, முட்டாள் என்று கூறுபவர், எதிர் கிறிஸ்து பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவையின் முன்னாள் தலைவர் பேராயர் சாக்ரடீஸ் வியேகாஸ்

பிலிப்பீன்ஸ் அரசுத்தலைவர், கத்தோலிக்கத் திருஅவைக்கும், இறைவனுக்கும் எதிராக வெளியிட்டு வரும் கருத்துக்களுக்கு மக்கள் கவனம் செலுத்தவேண்டாம் - பேராயர் சாக்ரடீஸ் வியேகாஸ்
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
பிலிப்பீன்ஸ் நாட்டின் அரசுத்தலைவர் ரொட்ரிகோ துத்தெர்தே அவர்கள் கத்தோலிக்கத் திருஅவைக்கும், இறைவனுக்கும் எதிராக வெளியிட்டு வரும் கருத்துக்களுக்கு மக்கள் கவனம் செலுத்தவேண்டாம் என்று, அந்நாட்டு பேராயர் ஒருவர், தன் புத்தாண்டு செய்தியில் கூறியுள்ளார்.
பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவையின் முன்னாள் தலைவரும், லிங்காயென்-தகுபான் உயர் மறைமாவட்டத்தின் பொறுப்பாளருமான பேராயர் சாக்ரடீஸ் வியேகாஸ் அவர்கள், செத் (Seth) என்ற பெயர்கொண்ட கற்பனைச் சிறுவன் ஒருவனுக்கு தான் எழுதும் திறந்த மடல் என்ற வடிவில், தன் புத்தாண்டு செய்தியை வெளியிட்டுள்ளார்.
அரசுத் தலைவரின் பெயரை இம்மடலில் ஒருமுறை கூட பயன்படுத்தாத பேராயர் வியேகாஸ் அவர்கள், துத்தெர்தே அவர்கள், கடவுளை, ஒரு முட்டாள் என்றும், கோவிலுக்குச் செல்வது, முட்டாள்தனமான செயல் என்றும் கூறியுள்ள எண்ணங்களுக்குக் கண்டனம் தெரிவித்து, இவ்வகையில் பேசுபவர்கள் 'எதிர் கிறிஸ்து' என்று கூறியுள்ளார்.
சிறுவன் செத், பெண்களுக்கு மிகுந்த மரியாதை வழங்கவேண்டும் என்று இம்மடலில் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ள பேராயர் வியேகாஸ் அவர்கள், பெண்களை இழிவுபடுத்தி பெரியவர்கள் கேலியாகப் பேசும்போது, அவர்கள் சொல்வதை இரசித்து சிரிப்பதால், பெண்களை இழிவுபடுத்தும் போக்கு வளர்ந்து வருகிறது என்று கூறியுள்ளார்.
திருஅவையில் பணியாற்றுவோர் அனைவரும் வானதூதர்கள் அல்ல என்பதை, தன் புத்தாண்டு செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள பேராயர் வியேகாஸ் அவர்கள், குறையுள்ள தங்களை இறைவன் தன் கருவிகளாகத் தெரிவு செய்துள்ளார் என்பதையும் எடுத்துரைத்துள்ளார். (UCAN)

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...