Saturday, 19 January 2019

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் இனிய பொங்கல் திருநாள்

இனிய பொங்கல் நாளில், எல்லார் மனதிலும், மகிழ்ச்சியும் மனஅமைதியும் பெருகட்டும்
வத்திக்கான் வானொலி தமிழ்ப்பணி
உலகெங்கும் பரந்து வாழ்கின்ற எம் அன்புத் தமிழ் உறவுகள் அத்தனை பேருக்கும், எம் இனிய தைத் திருநாள் நல்வாழ்த்துக்கள். இந்த இனிய பொங்கல் நாளில், எல்லார் மனதிலும், மகிழ்ச்சியும் மனஅமைதியும் பெருகட்டும். எங்கும் நோய் நீங்கி புதுநல்வாழ்வு பொங்கட்டும். வறுமை நீங்கி செல்வம் பொங்கட்டும். அறியாமை அகன்று அறிவு பொங்கட்டும். இருள் மறைந்து ஒளி பொங்கட்டும். தைப் பிறப்பில் வேளாண்மை சிறக்கட்டும். கிராமங்கள் செழிக்கட்டும். சுற்றுச்சூழல் சீர்பெறட்டும். கால்நடைகள் காக்கப்படட்டும். எங்கும் தீமைகள் விலகட்டும். கோபங்கள் மறையட்டும். சாந்தி நிலவட்டும்.... அன்பைப் புகுத்திடுவோம், ஆசைகளை, பேராசைகளை எரித்திடுவோம். அன்புள்ளங்களே, நீங்கள் எல்லாரும் கடவுள் அருளால் இனிமையாய் வாழ வாழ்த்துகிறோம். புதுமைக்குப் பூபாளம் பாடுகின்ற பொங்கலுக்கு எம் நெஞ்சம்நிறை நல்வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment

ROBERT JOHN KENNEDY: New Decree clarifies discipline on Mass Intentions...

ROBERT JOHN KENNEDY: New Decree clarifies discipline on Mass Intentions... :   New Decree clarifies discipline on Mass Intentions and collec...