Thursday, 24 January 2019

சென்னையைச் சேர்ந்த ரேஷ்மா நிலோபர் என பெண்மணி கடல் பைலட்டாக பதவி ஏற்று உலகின் முதல் கடல் பைலட் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த ரேஷ்மா நிலோபர் என பெண்மணி கடல் பைலட்டாக பதவி ஏற்றுள் ளார். இவர்வதான் உலகின் முதல் கடல் பைலட் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
 Image may contain: 2 people, people smiling, text
தமிழகத்தின் சென்னையில் வசித்து வந்தவரான ரேஷ்மா நிலோபர். கடந்த 30ந்தேதி கடல் பைலட்டாக பதவி ஏற்றுள்ளார். இதன் காரணமாக அவர் உலகின் முதல் கடல் பைலட் மட்டு மல்லாமல் இந்தியாவின் முதல் கடல் பைலட் மற்றும் தமிழகத்தின் முதல் கடல் பைலட் என்ற பெருமைகளையும் பெற்றுள்ளார்.
சென்னை அண்ணா நகர் எஸ்பிஓஏ-வில் பள்ளிப் படிப்பை முடித்த ரேஷ்மா நிலோபர், பின்னர் பிர்லா தொழில்நுட்ப பல்கலைகழகத்துடன் இணைந்த அமெட் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பை முடித்துள்ளார்.
கடல் தொழில்நுட்பப் பொறியியல் படித்த ரேஷ்மா 2011-ல் கொல்கத்தா துறைமுகத்தில் பணிக்கு சேர்ந்து பயிற்சி பெற்று வந்தார். அதில் நடைபெற்ற பல்வேறு கட்ட பயிற்சிகளில் தேர்ச்சி பெற்று, கடல் பைலட்டாக அமர பயிற்சி பெற்று வந்தார்.
இந்தநிலையில், தற்போது முதல் கடல் பைலட்டாக ரேஷ்மா பொறுப்பு ஏற்றுள்ளார். முதலில், சிறிய கப்பல்களை ஓட்ட உள்ள ரேஷ்மா , அதில் அனுபவம் கிடைத்ததும், தரம் 1 மற்றும் 2-ல் உள்ள பெரிய கப்பல்களை வழி நடத்துவார் என்றும், அதாவது 70000 டன் எடை கொண்ட 300 மீட்டர் நீளம் கொண்ட கப்பல்களை அவர் கையாள்வார் என்றும் கூறப்படுகிறது.
சாதாரணமாக, கடலில் இருந்து துறைமுகத்திற்கு கப்பலை கொண்டு சென்று நங்கூரம் இடுவது சவாலான விஷயம். இதற்கு தைரியமும் தன்னம்பிக்கையும் தேவை. ஆனால், ரேஷ்மா இந்த செயலை அநாயசமாக கையாண்டு உள்ளார். மேலும், முதன்முதலாக 223 கிமீ தூரத்துக்கு கப்பலை வழிநடத்த உள்ளார். இந்த பயணத்தில், 148கிமீ தூரமான அதிக வளைவுகள் மற்றும் தடைகள் கொண்ட அபாயமான வழி என்று கூறப்படுகிறது. இதற்காக ரேஷ்மா கொல்கத்தா துறைமுகத்தில் விசேஷ பயிற்சி பெற்று வருகிறார்.
தனது கடல் பைலட் பதவி குறித்த கூறிய ரேஷ்மா, எதோ படித்துவிட்டு ஐடி வேலையில் அமர விரும்பவில்லை எனது, விருப்பத்திற்கு என் குடும்பமும் ஒத்துழைத்தது இதன் காரணமாக எனக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று பெருமையுடன் தெரிவித்தார்.
Source: FB.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...