தவறான பழைய தரவுகளை இணையத்திலிருந்து அழிக்க கோரும் உரிமை குடிமக்களுக்கு உண்டு
ஒருவர் இணையத்தில் தம்மைப் பற்றி இருக்கின்ற பழைய தகவல் தம்முடைய பெயருக்கு சேதம் விளைவிப்பதாக இருந்தாலும் அல்லது பொருத்தமற்றதாக இருந்தாலும் கூகுள் போன்ற இணைய தேடல் சேவை வழங்குவோரிடம் அவற்றுக்கான இணைப்புகளை அழிக்கச் சொல்லி கேட்கலாம் என ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மறக்கப்படுவதற்கான உரிமை என்று சொல்லப்படுகின்ற இந்த விஷயம் கோரப்பட்டால், சில வார்த்தைகளை இட்டுத் தேடும்போது கிடைக்கக்கூடிய இணைப்புகள் சிலவற்றை தேடல் சேவை இணையதளங்கள் அழித்துவிட வேண்டும் என்பதாக இந்த உத்தரவு அமைந்துள்ளது.
ஸ்பானியக் குடிமகன் ஒருவர், தன்னைப் பற்றி இணையத்தில் இப்போது தேடினாலும் பதினாறு வருடங்களுக்கு முன் தான் கடன்களை அடைப்பதற்காக ஒரு சொத்தை விற்றது பற்றிய பத்திரிகை செய்திகள் முடிவுகளில் வருகின்றன என்று முறையிட்டு தொடர்ந்த வழக்கில் இந்த முடிவு வந்துள்ளது.
அந்த விவகாரம் எப்போதோ தீர்க்கப்பட்டுவிட்டது என்றும், இனிமேலும் அதில் தன்னை சம்பந்தப்படுத்தக் கூடாது என்றும் அவர் வாதிட்டிருந்தார்.
தனிநபர் பற்றிய தரவுகளை தாம் கொண்டிருக்கவில்லை என்றும், இணையத்தில் வேறு இடங்களில் எல்லோரும் பார்க்கும் விதமாக அமைந்துள்ள தரவுக்கான இணைப்பை மட்டுமே தாம் வழங்குவதாகவும் கூகுள் வாதிட்டிருந்தது.
BBC-
No comments:
Post a Comment