ஜேர்மன் பிரான்ஸ் நாடுகளில் முள்ளி வாய்க்கால் தொடர் நினைவேந்தல் நிகழ்வுகள்
மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினை மையமாக கொண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தர வார நிகழ்வுகள் புலம்பெயர் தேசங்களெங்கும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், ஜேர்மன் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் பல்வேறு நிகழ்வுகள் ஒருங்குபடுத்தப்பட்டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஜேர்மன்
ஜேர்மனியில் Muenster, Dortmund, Nürnberg , Bonn, Stuttgart ஆகிய நகரங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஜேர்மனிய பிரதிநிதிகளால் ஒருங்கு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மே11ம் நாள் ஞாயிற்றுக்கிழமை Muenster நகரில் தொடங்கிய நினைவேந்தல் நிகழ்வுகள் , 12ம் நாள் திங்கட்கிழமை Dortmund நகரில் இடம்பெற்றுள்ளது.
மே16ம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு Von der bleiweiss Str 04, 90459 Nürnberg இடத்திலும், 18ம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 6மணிக்கு Christian Lassen Str 06, 53117 Bonn இடத்திலும் , 25ம் நாள் ஞாயிற்றுக்கிழமை 11மணிக்கு Hellmann Str 10 , 70372 Stuttgart இடத்திலும் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏறபாடு செய்யப்பட்டுள்ளன.
பிரான்ஸ்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுதுணையாளர்களின் ஒருங்கிணைப்பில் மே16ம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு, லாச்சபல் பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் உயரிழந்த மக்களுக்கான வணக்க வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மே18ம் நாள் ஞாயிற்றுக்கிழமை பாரிசின் புறநகர் Bagneux நகரின் Blagis பகுதி சதுக்கத்தில் பிரென்சு மக்களுடனான வணக்க வழிபாட்டு ஒன்றுகூடலொன்றும், அப்பகுதி தமிழ் சங்கத்தின் உதுணையுடன் தமிழீழத் தேசிய துக்க நாள் வணக்க நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வுகளில் பொதுக்கள் அனைவரையும் பங்கெடுத்து இழந்த மண்ணுக்கு மக்களுக்கு வணக்கம் செலுத்துவதோடு தமிழர்களுகான பரிகார நீதியினை அனைத்துலகத்திடம் உரக்க கோருவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
No comments:
Post a Comment