Wednesday, 14 May 2014

இலங்கை தீவில் தமிழ் பெண்களுக்கு எதிராக கட்டமைக்கப்பட்ட வன்முறை பற்றிய மாநாடு

இலங்கை தீவில் தமிழ் பெண்களுக்கு எதிராக கட்டமைக்கப்பட்ட வன்முறை பற்றிய மாநாடு

Source: Tamil CNN
பிரித்தானிய தமிழர் பேரவையும் , தமிழர்களுக்கான அனைத்து கட்சி பாராளுமன்ற குழுவும் இணைந்து 13 May 2014 இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4.00 மணி தொடக்கம் 8.00 மணி வரை பிரித்தானிய பாராளுமன்றத்தில் இம் மாநாட்டை நடாத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
கடந்த 60 வருடங்களுக்கு மேலாக இலங்கை இனவாத அரசுகளினால் கட்டமைக்கப்பட்ட ரீதியான பாலியல் வன்முறைகள் தொடர்ச்சியாக இலங்கை இராணுவத்தினரால் தமிழர் தாயகப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக 2009ம் ஆண்டு மே மாத இறுதி யுத்த காலப்பகுதியில் பல தமிழ் பெண்கள் கொடுரமான பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டும் , 80,000க்கு மேற்பட்ட இளம் தமிழ் பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டும் , தொடர்ச்சியாக தமிழர் தாயகப்பகுதியில் கட்டாய கருத்தடை என்ற போர்வையில் தமிழ் பெண்கள் மூலம் இன கருவறுப்பும் நடைபெற்று வருகிறது.
இறுதி யுத்த காலப்பகுதியில் பாதிப்புகளுக்கு உள்ளாகி புலம்பெயர் நாட்டில் வசித்துவரும் பெண்கள் அல்லது பாதிப்புக்கு உள்ளான பெண்களின் உறவினர்கள் , நண்பர்கள் கலந்து கொண்டு தமக்கு நேர்ந்த கொடூரங்களை இம் மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் மகளிர் அமைப்புக்களின் உறுப்பினர்கள் , சட்டத்தரணிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் , வன்முறைகள் சம்மந்தமான ஆய்வாளர்கள் ஆகியோரிடம் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பத்தை பிரித்தானிய தமிழர் பேரவையினர் ஏற்படுத்தியுள்ளனர்.
இத்துடன் எதிர்வரும் மே18 Trafalgar Square இல் நடைபெற இருக்கும் நினைவுகூறல் நிகழ்வில் பிரித்தானியா வாழ் அனைத்து தமிழ் மக்களும் கலந்து கொண்டு மீண்டும் ஒரு முறை சர்வதேசத்திற்கு தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட இனப்படுகொலையை உரக்கக்கூறுவோம் .
Mullivaikkaal 2014

No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...