Saturday, 14 September 2013

வீரர்கள் உணவுக்காக விண்வெளியில் கீரை பயிரிட நாசா திட்டம்

வீரர்கள் உணவுக்காக விண்வெளியில் கீரை பயிரிட நாசா திட்டம்

Source: Tamil CNN
அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்ணில் சர்வதேச விண்வெளி ஆய்வு கூடம் அமைத்து வருகின்றனர். அதில் பணிபுரிய பூமியில் இருந்து விண்வெளி வீரர்கள் சென்று வருகின்றனர். விண்வெளிக்கு செல்லும் வீரர்களுக்கு விசேஷமாக தயாரிக்கப்பட்ட உணவு வழங்கப்படுகிறது. அதற்காக அவர்களுக்கு 450 கிராம் (ஒரு பவுண்டு எடை) உணவுக்கு அதிகம் செலவாகிறது.
எனவே, செலவை குறைக்க வீரர்களின் உணவுக்கு பூமியில் இருந்து 380 கி.மீ. தூரத்தில் உள்ள விண்வெளியில் பண்ணை அமைத்து அதில் கீரை வகைகளை பயிரிட ‘நாசா’ மையம் திட்டமிட்டுள்ளது. பின்னர் படிப்படியாக காய்கறிகளும் பயிரிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்குரிய பண்ணை அமைக்கும் வசதியை உருவாக்கும் எந்திரங்கள் விரைவில் அனுப்பப்பட உள்ளன.
இந்த தகவலை சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்தின் திட்ட விஞ்ஞானி ஹோவார்ட் லெவின் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் வருகிற டிசம்பரில் விண்வெளியில் தொடங்கப்படுகிறது.

No comments:

Post a Comment