Saturday, 21 September 2013

தமிழர்கள் நீதிக்காக யாரிடம் செல்வது? நோர்வே, கனடா உயர் ஸ்தானிகர்களிடம் மன்னார், யாழ் ஆயர்கள் கேள்வி

தமிழர்கள் நீதிக்காக யாரிடம் செல்வது? நோர்வே, கனடா உயர் ஸ்தானிகர்களிடம் மன்னார், யாழ் ஆயர்கள் கேள்வி

Source: Tamil CNNவடக்கு மாகாணசபை தேர்தல் நடவடிக்கைகளில் நீதிக்கு முரணான பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ள போதும் அரசாங்கம் அவற்றுக்கு ஊக்கமளிப்பது போல் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழர்கள் நீதிக்காக யாரிடம் செல்வது என நோர்வே மற்றும் கனடா ஆகிய நாடுகளின் உயர் ஸ்தானிகர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளதாக மன்னார் மற்றும் யாழ்.மாவட்ட ஆயர்கள் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.
யாழ்.ஆயர் இல்லத்தில் மன்னார் மற்றும் யாழ்.மாவட்ட ஆயர்களை நோர்வே நாட்டின் உயர்ஸ்த் தானிகர் கிறீற்ரி லொச்சன் மற்றும் கனடா நாட்டின் இலங்கைக்கான தூதுவராலய அரசியல், பொருளாதார ஆலோசகர் மெகன் பொஸ்ரர் ஆகியோர் சந்தித்துப் பேசியிருந்தனர்.
குறித்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு கூறினர்.
இன்று யாழ் விஜயம் செய்த வெளிநாட்டு துர்தரக அதிகாரிகள் யாழ ஆயர் இல்லத்தில் இந்தச் சந்திப்பை மேற்கொண்டிருந்தனர்.
வடபகுதிக்கு விஜயம் செய்த இவர்கள் நளை நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பில் ஆயர்களிடம் கேட்றிந்துகொண்டுள்ளனர்.
இதன் போது வடக்கில் அரசாங்கம் மேற்கொள்ளும் வன்முறைகள் மற்றும் இராணுவத்தின் செயற்பாடுகள் குறித்து தூதுவர்களுக்கு ஆயர்கள் விளக்கியுள்ளனர்.
இதேவேளை நேற்றி நள்ளிரவு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெண்வேட்பாளர் எழிலன் அனந்தியின் வீடு தாக்கப்பட்டமை தொடர்பிலும் துர்துவரிடம் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
news (3)
news (2)
news (1)

No comments:

Post a Comment