உலகின் மிகப்பெரிய நடக்கும் ரோபோ
ஜேர்மனியின் இலத்திரனியல் நிறுவனமொன்று உலகின் மிகப்பெரிய ரோபோ ஒன்றினை உருவாக்கியுள்ளது.
நெருப்பை சுவாசித்து நடக்கக் கூடிய 4 கால்களைக்கொண்ட 50 அடி நீளமும் 12 அடி அகலமும் 14 அடி உயரருமான இந்த ட்ரகன் ரோபோவினை ஷோல்னர் எலக்ட்ரோனிக் ஏ.ஜி. என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது.
கலாசார மற்றும் புதுமைகள் படைக்கும் திட்டமான ட்ரடினோ எனும் திட்டத்தின் கீழ் இது உருவாக்கப்பட்டுள்ளது. 39 அடி நீளமான சிறகைக்கொண்டு மேலெழக்கூடிய 11 தொன் நிறையுடைய இப்பாரிய ரோபோவிற்கு ´பனி´ எனப்பெயரிடப்பட்டுள்ளது.
இந்த ரோபோவானது நடக்கும் மிகப்பெரிய ரோபோ என கடந்த 12ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள 2014ஆம் ஆண்டிற்கான கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.272 வால்வுகள், 4265 அடி நீளமான இலத்திரனியல் கேபிள் மற்றும் 165 லீட்டர் ஒயில் என்பவற்றைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த பனியால் சுமார் மணிக்கு 2 கி.மீ தூரம் வேகமாக பயணிக்கக்கூடியது. ஜேர்மனியின் கலாசார நிகழ்வொன்றில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.
No comments:
Post a Comment