35 எழுத்துகளைக் கொண்ட பெண்ணின் பெயரால் அமெரிக்க அடையாள அட்டையின் அமைப்பே மாறுகிறது
தனது பெயரில் 35 எழுத்துக்களைக் கொண்ட ஹவாய் தீவுப் பெண்மணிக்காக, அமெரிக்க மாநிலங்களில் அடையாள அட்டைக்கான அமைப்பு மாற்றப்பட உள்ளது. அமெரிக்காவின் ஹவாய் தீவைச் சேர்ந்த பெண்மணி மறைந்த அவரது கணவரின் பெயரையும் சேர்த்து Janice “Lokelani” Keihanaikukauakahihuliheekahaunaele என 35 எழுத்துக்களில் தனது பெயரைக் கொண்டுள்ளார். அவரது ஓட்டுநர் உரிமத்தில் பாதி பெயர் விடுபட்ட நிலையில் உள்ளது. இதனால் போக்குவரத்துக் காவலர் ஒருவர் மனம் நோகும்படி தன்னிடம் நடந்துகொண்டதாக உள்ளூர் தொலைக்காட்சி சேனலின் மூலம் தெரிவித்தார்.
இதனையடுத்து ஹவாய் போக்குவரத்துத் துறையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் ஸ்லைட்டர் இந்த ஆண்டு இறுதிக்குள், ஓட்டுநர் அடையாள அட்டையில் 40 எழுத்துக்களைக் கொண்ட பெயரினை பதிவு செய்யும் அளவிற்கு இடம் வழங்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment