Saturday, 14 September 2013

சென்னை அருகே கும்மிடிப்பூண்டியில் ரூ.330 கோடியில் புதிய நீர் தேக்கம்

சென்னை அருகே கும்மிடிப்பூண்டியில் ரூ.330 கோடியில் புதிய நீர் தேக்கம்

Source: Tamil CNNசென்னை அருகே திருவள்ளூர் மாவட்டத்தில் இரண்டு ஏரிகளை இணைத்து ரூ.330 கோடியில் புதிய நீர் தேக்கம் அமைப்பதற்கான அடிக்கல்லை முதல்வர் ஜெயலலிதா நாட்டினார்.தலைமைச் செயலகத்தில் விடியோ கான்பரன்சிங் முறை மூலம் புதிய நீர் தேக்கத்துக்கு புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
இது குறித்து, தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
நீரை விணாக்காமல் நீர் நிலைகளில் தேக்கி வைப்பது மிகவும் அவசியம். தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பான குடிநீர் அளித்திடவும், அனைவருக்கும் குடிநீர் தேவைகளை முழு அளவில் பூர்த்தி செய்யும் வகையிலும் தமிழகத்திலுள்ள ஏரிகளில் கூடுதலாக தண்ணீர் சேமித்து வைக்க சீராக்க பணிகளையும், புதிய நீர்த் தேக்கங்களை உருவாக்கிடும் பணிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.
சென்னை மாநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகரங்களில் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஆந்திரத்திலிருந்து பெறப்படும் கிருஷ்ணா குடிநீரையும், பருவ காலங்களில் பொழியும் மழை நீரையும் கூடுதலாக தேக்கி வைக்க, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் கண்ணன்கோட்டை மற்றும் தேர்வாய்கண்டிகை ஆகிய கிராமங்களில் உள்ள இரண்டு ஏரிகளை இணைத்து ரூ.330 கோடியில் புதிய நீர் தேக்கம் அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
அதன்படி, இந்தத் திட்டத்துக்கான அடிக்கல்லை தலைமைச் செயலகத்தில் இருந்து விடியோ கான்பரன்சிங் முறை மூலம் புதன்கிழமை அடிக்கல் நாட்டினார் முதல்வர்.என்ன பயன்? புதிய நீர்த் தேக்கத்தில் ஒரு ஆண்டுக்கு இருமுறை தண்ணீர் நிரப்புவதன் மூலம் ஆயிரம் மில்லியன் கன அடி நீரைச் சேமித்து வைக்கலாம்.
இதனால் சென்னை மாநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கான குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்த வழிவகை ஏற்படும். இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், பொதுப்பணித் துறை செயலாளர் எம்.சாய்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment