குழந்தைகளைக் கொன்று தின்றவருக்கு 27 வருடச் சிறைத்தண்டனை:அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு
குழந்தைகளை கொடுமைப்படுத்தி, ஆபாச படம் எடுத்த, பிரிட்டனை சேர்ந்த நபருக்கு, அமெரிக்காவில், 27 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனை சேர்ந்தவன், ஜெப்ரி போர்ட்வே, 40. அமெரிக்காவின், மாசாசூசெட்ஸ் பகுதியில், சுரங்க அறை அமைத்து வசித்து வந்தான். இந்த அறையில் சிறுவர்கள் பலரை அடைத்து, பல்வேறு கொடுமைகளை செய்து வந்தான்.
சிலரை கொன்று சாப்பிட்டதாக கூறப்படுகிறது. ஜெப்ரியை கைது செய்த போலீசார், இவன் மீது, குழந்தைகளை கடத்துவது, அவர்களை கொடுமை படுத்தியது, சிறுவர்களை கொலை செய்தது, விபசாரம் செய்வது மற்றும் ஆபாசப்படம் எடுத்தது என, பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை நேற்று, நடந்தது. அப்போது, ஜெப்ரிக்கு, 27 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து, நீதிபதி தீர்ப்பளித்தார். கோர்ட்டுக்கு வெளியே பேட்டி அளித்த நீதிபதி குறிப்பிடுகையில், “இதுபோன்ற பயங்கர குற்றவாளிக்கு, தண்டனை அளித்ததை பெருமையாக கருதுகிறேன்’ என்றார்.
No comments:
Post a Comment