21 புதிய கர்தினால்களுள் இந்தியாவிலிருந்து இருவர்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 29 இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல நாடுகளின் ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய பின்னர், இந்தியாவிலிருந்து இருவர் உட்பட 21 புதிய கர்தினால்களின் பெயர்களை அறிவித்தார்.
இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நடத்தவிருக்கும் எட்டாவது கர்தினால்கள் அவையில், இந்தியா, சிங்கப்பூர், தென் கொரியா, கிழக்குத் திமோர், மங்கோலியா ஆகிய ஆசிய நாடுகளிலிருந்து ஆறு பேர், ஐரோப்பாவிலிருந்து எண்மர், ஆப்ரிக்காவிலிருந்து இருவர், வட அமெரிக்காவிலிருந்து ஒருவர், மத்திய மற்றும், இலத்தீன் அமெரிக்காவிலிருந்து நால்வர் என 21 பேரை புதிய கர்தினால்களாக உயர்த்துவார்.
இந்தியாவின் கோவா மற்றும் டாமன் பேராயர் Filipe Neri António Sebastião di Rosário Ferrão, ஹைதராபாத் பேராயர் Anthony Poola ஆகிய இருவரும், இஞ்ஞாயிறன்று திருத்தந்தை அறிவித்துள்ள 21 புதிய கர்தினால்களுள் அடங்குவர்.
- 3.வத்திக்கான் நகர நாட்டின் பாப்பிறை அவையின் தலைவர், மற்றும், வத்திக்கான் நாட்டின் மேலாண்மைத் தலைவர் பேராயர் Fernando Vérgez Alzaga
- 4. பிரான்சின் Marseille பேராயர் Jean-Marc Aveline
- 5. நைஜீரியாவின் Ekwulobia ஆயர் Peter Okpaleke
- 6. பிரேசில் நாட்டின் Manaus பேராயர் Leonardo Ulrich Steiner, O.F.M.
- 7. இந்தியாவின் கோவா மற்றும் டாமன் பேராயர் Filipe Neri António Ferrão
- 8. அமெரிக்க ஐக்கிய நாட்டின் San Diego ஆயர் Robert Walter McElroy
- 9. கிழக்குத் திமோரின் திலி பேராயர் Virgilio Do Carmo Da Silva, S.D.B.
- 10. இத்தாலியின் கோமோ ஆயர் Oscar Cantoni
- 11. இந்தியாவின் ஹைதராபாத் பேராயர் Anthony Poola
- 12. பிரேசில் நாட்டின் பிரேசிலியா பேராயர் Paulo Cezar Costa
- 13. கானா நாட்டின் Wa ஆயர் Richard Kuuia Baawobr
- 14. சிங்கப்பூர் பேராயர் William Goh Seng Chye
- 15. பரகுவாய் நாட்டின் Asunción பேராயர் Adalberto Martínez Flores
- 16. மங்கோலியா நாட்டின் Ulaanbaatar அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Giorgio Marengo, I.M.C.
- 17. கொலம்பியா நாட்டின் Cartagenaவின் முன்னேள் பேராயர் Jorge Enrique Jiménez Carvajal -
- 18. பெல்ஜியம் நாட்டின் Gent முன்னேள் ஆயர் Lucas Van Looy, S.D.B.
- 19. இத்தாலியின் Cagliari முன்னேள் பேராயர் Arrigo Miglio
- 20. இறையியல் பேராசிரியர் அருள்பணி Gianfranco Ghirlanda சே.ச.
- 21. புனித பேதுரு பெருங்கோவிலின் பேரருள்திரு Canon, Fortunato Frezza
No comments:
Post a Comment